Published : 09 Jul 2020 08:39 AM
Last Updated : 09 Jul 2020 08:39 AM
சீனாவின் ‘நம்ப முடியாத ஆக்ரோஷமான செயல்களுக்கு’ எதிராக இந்தியா சிறப்பாகவே செயல்பட்டுள்ளதாக அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு இதே தொடர்கதையாகிப் போய்விட்டது, பிராந்திய நிலைத்தன்மையைச் சீர்குலைக்க ஒரேமாதிரியான ஆக்ரமிப்புச் செயல்பாடுகளை சீனா மேற்கொண்டு வருகிறது இந்த உத்தியை நாம் அனுமதிக்க முடியாது.
“நான் இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் நிறைய முறை பேசியுள்ளேன். சீனா நம்ப முடியாத அளவுக்கு அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. இந்தியா அதற்கு எதிராக சிறப்பாகவே பதில் அளித்துள்ளது” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
திங்களன்று எல்லையில் சீனா தன் படைகளை வாபஸ் பெறத் தொடங்கியது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இடையே நீண்ட பேச்சு வார்த்தை நடந்தது. இதனையடுத்து இருதரப்பினரும் துருப்புகளை கண்ணுக்கு கண் சந்திக்க முடியாத தொலைவுக்குக் கொண்டு சென்றன.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மைக் பாம்பியோ கூறியிருப்பதாவது:
இந்திய எல்லை என்றல்ல உலகம் முழுதுமே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஜின்பிங் செயல்பாடுகளை ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் வைத்துப் பார்க்க விரும்புகிறேன்.
இந்தியாவுக்கு எதிரான அத்துமீறலை தனியான ஒரு விஷயமாக நான் பார்க்கவில்லை. இன்னும் பரந்துபட்ட சூழலில் பொருத்த விரும்புகிறேன்.
சமீபத்தில் பூடானின் சில பகுதிகளையும் இணைத்து அவர்களுடன் பிரச்சனை செய்துள்ளது. இமாலய மலைத்தொடர் முதல் தென் சீனக் கடல் பகுதி வரை சீனா பிராந்திய சிக்கல்களை உருவாக்குவதில் ஒரு குறிப்பிடத்தகுந்த ஃபார்முலாவைக் கடைப்பிடித்து வருகிறது.
உலகம் இதனை சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனைத் தொடர அனுமதிக்க முடியாது.
எல்லையில் திருத்தல்வாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு உலகம் ஒன்றெழுந்து பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை அதிபர் ட்ரம்பும் பெரிய அளவில் சீரியஸாக அணுகுகிறார்.
தென் சீன கடல்பகுதியில் பல ராணுவத்தீவுகளை சீனா ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் எண்ணெய் மற்றும் கனிமவளங்கள் அதிகம். இது உலக வர்த்தகத்துக்கு முக்கியம்.
இவ்வாறு கூறினார் மைக் பாம்பியோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT