Last Updated : 07 Jul, 2020 10:53 AM

 

Published : 07 Jul 2020 10:53 AM
Last Updated : 07 Jul 2020 10:53 AM

சீன அடக்குமுறைகளுக்கு எதிராக நீதி கேட்டு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடிய உய்குர் முஸ்லிம்கள்

தி ஹேக் (நெதர்லாந்து)

சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்கள் சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதான முதல் முறை முயற்சியாகும் இது.

இது தொடர்பாக நியூயார்க்டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இரண்டு உய்குர் முஸ்லிம்கள் செயல்பாட்டுக் குழுவை 2 லண்டன் வழக்கறிஞர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இது தொடர்பாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 2 உய்குர் குழுக்கள், கிழக்கு துருக்கிஸ்தான் புலம்பெயர் அரசு, மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் ஆகிய அமைப்புகள் சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளன. கிழக்கு துருக்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம்தான் ஷின்ஜியாங் விடுதலைக்காக விழிப்புணர்வு மேற்கொண்ட இயக்கமாகும், இதனை கிழக்கு துருக்கிஸ்தான் என்றே இவர்கள் அழைக்கின்றனர்.

இது தொடர்பாக கிழக்கு துருக்கிஸ்தான் அமைப்புக் கூறும்போது, ஆக்ரமிக்கப்பட்ட ஷின்ஜியாங், அதாவது கிழக்கு துருக்கிஸ்தான் பகுதிக்குள் தாஜிகிஸ்தான், கம்போடியாவிலிருந்து வரும் உய்குர் முஸ்லிம்களை நாடு கடத்துகின்றனர். சீனாவுக்கு திரும்புகையில் இவர்களை கடும் குற்றச்செயல்களுக்கு ஆட்படுத்துகின்றனர். இவர்களை கொலை செய்கின்றனர், சட்ட விரோத சிறை, சித்ரவதை, கட்டாய பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை, கட்டாயத் திருமணம் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி கடும் அராஜகங்களை இவர்கள் மீது ஏவி விடுகிறது, என்று குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தங்கள் 80 பக்க புகாரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 30 சீன அதிகாரிகளைக் குற்றம்சுமத்தியுள்ளது.

“உய்குர் முஸ்லிம்கள், கஸகஸ்தான் நாட்டுக்காரர்கள், கிரிகிஸ்தான் நாட்டிலிருந்து வந்தவர்கள், மற்றும் பிற துருக்கிய மக்கள் மீது சீன கடும் குற்றச்செயல்களைப் புரிகிறது, இது விசாரிக்கப்பட்டே ஆக வேண்டும். படுகொலைகள், பெரிய அளவில் தனிமை முகாம்கள், சித்ரவதை, காணாமல் போவது, கட்டாய கருத்தடை சிகிச்சை, குழந்தைகளை பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து சீன அனாதை இல்லங்களுக்குக் கொண்டு செல்லுதல், பள்ளிகளில் எங்கள் மொழிகளை ஒழித்துக் கட்டுவது” என்று பெரிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிட்டன் வழக்கறிஞர் ராட்னி டிக்சன் கூறும்போது, இது மிகவும் முக்கியமான வழக்கு, ஏனெனில் நீண்ட காலமாக சீனாவை யாரும் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது,பொறுப்பாக்க முடியாது என்று கருதி வருகின்றனர்.

இது தொடர்பாக புகார்தாரர்கள் சித்ரவதை அனுபவித்தவர்களின் நேரடி சாட்சியங்களை இணைத்துள்ளது, மின்சாரம் பாய்ச்சிக் கொல்லுதல், பன்றி இறைச்சியை கொடுத்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி இழிவு படுத்துதல், கடும் குடிக்கு ஆளாக்குதல், உய்குர் முஸ்லிம் பெண்கள் குழந்தைப் பேறு பெற முடியாதபடி கருத்தடை சாதனங்களை பொருத்துதல். சுமார் 5 லட்சம் உய்குர் முஸ்லிம் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து அனாதை முகாம்களுக்கு அனுப்புதல் ஆகியவற்றோடு அங்கு குழந்தைகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் உள்ளன, என்று கூறுகிறார்.

ஆனால் என்று உய்குர் முஸ்லிம்களுக்கான நீதி கிடைக்கும் என்பது தெரியவில்லை, ஏனெனில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோமானியச் சட்டம் என்ற உடன்படிக்கையில் சீனா கையெழுத்திடவில்லை, இருந்தாலும் உய்குர் முஸ்லிம்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகவே வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x