Published : 06 Jul 2020 03:55 PM
Last Updated : 06 Jul 2020 03:55 PM
ஈரான் எண்ணெய் ஏற்றுமதியை எப்படியாவது பூஜ்ஜியத்துக்குக் கொண்டு வந்து விடவேண்டும் என்ற அமெரிக்க முயற்சி தோல்வி அடைந்தது என்று ஈரான் துணை அதிபர் இஷாக் ஜஹாங்கிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜஹாங்கிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் வாழ்வாதாரமான எண்ணெயை தனது கடுமையான தடைகள் மூலம் முடக்க அமெரிக்கா திட்டமிட்டது.
முந்தைய தடைகளினால் ஈரான் 10 லட்சம் பேரல்கள் வரையே ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிலையில் 9 லட்சம் பேரல்கள் ஏற்றுமதி செய்தோம். இப்போது அமெரிக்கா ஈரான் எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால் அமெரிக்கா இதில் கடுமையாகத் தோல்வி தழுவியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரான் தனது பிரதான வருவாய் ஆதாரமான எண்ணெயிலிருந்து வேறு துறைகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது. ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியும் எண்ணெய் மீதான சார்பை தளர்த்தி விட்டால் அமெரிக்க தடைகள் வேலை செய்யாது என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் முதல் முறையாக தங்கள் கவனத்தை எண்ணெயிலிருந்து திசைத் திருப்பி வருகிறது என்றார் ரவ்ஹானி.
மேலும் எண்ணெய் ஏற்றுமதிக்காக புதிய பாதைகளை ஈரான் கண்டடைந்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் சூழல் நிலையற்றதாக இருப்பதால் அதன் வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்தால் அது ஆபத்தில் முடியலாம் என்றும் ஈரான் முடிவெடுத்துள்ளது.
ஈரான் தற்போது கூரே எண்ணெய் முனையத்திலிருந்து ஜாஸ்க் துறைமுகத்துக்கு பைப்லைன் அமைத்து வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல்களை பெர்சியா வளைகுடாவின் கிழக்குப் பகுதியிலிருந்து நேரடியாக ஓமான் வளைகுடாவுக்கு அனுப்ப முடியும். இதன் மூலம் அபாயகரமான ஹோர்முஸ் பகுதியை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயுள்ளது. இந்த பைப்லைன் திட்டம் 2021-ல் முடியும் என்று ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT