Published : 04 Jul 2020 08:44 AM
Last Updated : 04 Jul 2020 08:44 AM
அண்டை நாடுகளுடன் சீனா எப்போதும் விரோதம் பாராட்டி வருகிறது என்று அமெரிக்க எம்.பி. டாம் காட்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
எல்லையில் சீனா அத்துமீறி 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததையடுத்து அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறது.
அமெரிக்க செனட் அவையின் மூத்த உறுப்பினர் டாம் காட்டன் கூறும்போது, “சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அண்டை நாடுகளை மிரட்டி வருகிறது. தென் சீனக் கடல் பகுதி, வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை மிரட்டி வருகிறது, அந்நாடுகளின் வளர்ச்சியைத் தடுத்து வருகிறது.
தைவான், ஜப்பான் வான்வெளியையும் சீனா ஆக்ரமித்து வருகிறது. ஹாங்காங் நிலவரம் பற்றி கூற வேண்டிய அவசியமேயில்லை. அடக்குமுறை தொடர்ந்து வருகிறது.
ஆசியாவில் இந்தியா ஒரு பெரும் சக்தியாக வளர்ந்து வருவதை சீனா விரும்பவில்லை. தனக்குப் போட்டியாக இந்தியா வந்து விடும் என்றுதான் எல்லையில் சீனா பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோக்கமே அது எல்லையில் அத்துமீறக் காரணம்.
இந்தியாவின் நெருங்கிய நண்பன் அமெரிக்கா, எனவே இது தொடர்பாக இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். கரோனா உலகம் முழுதும் பரவி வருவதையடுத்து இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முயற்சி செய்கிறது” என்றார் டாம் காட்டன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 23 Comments )
அமெரிக்கா கடந்த காலங்களில் நமது வளர்ச்சியை எவ்வாறு தடுத்தார்கள் என்பது உலகு அறியும். இப்போதும் அவர்கள் நம்ப தகுந்த கூட்டாளி இல்லை , அவர்கள் வியாபார நோக்கத்துடன் தான் அணுகுவார்கள். காலத்தின் தேவை காரணமாக இப்போது நம் பக்கம் அவர்கள் பார்வை திரும்புகிறது. இந்திராகாந்தி இருந்த போது மேற்கொள்ளப்பட்ட அணி சேரா நாடாக இந்தியா இருந்து இருந்தால் இந்திய தலைமையில் மூன்றாவது நாடுகளுக்கு நமது தலைமை நீடித்து இருக்கும், இந்திரா , நேருவுக்கு பிறகு தொலை நோக்கு கொண்ட தலைவர்கள் இல்லாதது பெரிய இழப்பே.
0
0
Reply
My American friend. More than 15 percent of our brother do not know where the next food will come from. More than 30 percent of the population do not have access to clean drinking water And we are not a Super power or aspiring super power . Leave us alone.
5
2
Reply