Published : 29 Sep 2015 06:45 PM
Last Updated : 29 Sep 2015 06:45 PM
வடக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கைப்பற்றப்பட்ட குண்டஸ் நகர் மீது அமெரிக்கப் படையினர் இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
இந்நகரை தலிபான் தீவிரவாதிகள் திங்களன்று கைப்பற்றினர். நகரின் சதுக்கத்தில் தங்கள் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால் குண்டஸ் நகர் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக இப்படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரியன் ட்ரிபஸ் நேற்று தெரிவித்தார்.
மாகாண காவல்துறை செய்தித் தொடர்பாளர் சர்வார் ஹசைனி கூறும்போது, “இந்நகரை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முனைகளில் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன” என்றார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரால் கடந்த 2001-ல் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டது. இதன் பிறகு முதல் முறையாக குண்டஸ் நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கன் அதிபராக அஷ்ரப் கனி பதவியேற்று ஓராண்டு நிறைவடையும் தருணத்தில் இந்நகர் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT