Published : 29 Jun 2020 04:36 PM
Last Updated : 29 Jun 2020 04:36 PM
ஜிம்பாப்வே உட்பட ஆப்பிரிக்காவில் கனிம வளங்கள் மற்றும் நிலகரி சுரங்க தொழிலில் சீன முதலாளிகள் பலர் ஏகப்பட்ட தொகையினை முதலீடு செய்து நடத்தி வருகின்றனர், ஆனால் தொழிலாளர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் கிடையாது சுகாதார, சுற்றுச்சூழல் மனித உரிமை மீறல்களில் சீன முதலாளிகள் ஈடுபட்டு வருவதாக ஜிம்பாப்வே சுற்றுச்சூழல் சட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் குறைந்த சம்பளத்தில் கடுமையான பணியில் அவர்களை எந்தவிதப் பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லாமல் ஈடுபடுத்துவதாக மனித உரிமைகள் அமைப்புகள் ஏற்கெனவே பலமுறை கூறிவந்தன.
இந்நிலையில் தொழிலாளர்களை சீன முதலாளி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கடந்த ஞாயிறன்று நடந்தது.
செண்ட்ரல் ஜிம்பாப்வேயில் க்வேரு மாகாணத்தில் சுரங்க முதலாளி சாங் சுவென் நிலுவைக் கூலியைக் கேட்ட தொழிலாளி ஒருவரை இடது தொடையில் 3 முறையும், வலது தொடையில் 2 முறையும் சுட்டுள்ளார். இன்னொரு தொழிலாளர் மீதும் தோட்டா பாய்ந்தது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாங் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஞாயிறன்று நடந்த இந்தச் சம்பவத்தினால் சீனாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான உறவுகள் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஜிம்பாபவேயில் எழுந்துள்ளதாக சிஎன்என் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.
தொழிலளி கென்னத் டேக்கியோனா என்பவர் ஒப்பந்தத்தின் படி கூலித் தொகையை அமெரிக்க டாலர்களில் வழங்க மறுத்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்ற துப்பாக்கியை எடுத்து ஈவு இரக்கமில்லாமல் சுட்டுள்ளார் சீன முதலாளி சாங்.
இந்த சம்பவம் குறித்து ஜிம்பாப்வேயில் உள்ள சீன தூதரகம் கூறும்போது, இது ஒரு தனிப்பட்ட சம்பவம், வெளிப்படையான விசாரணையை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வே நாட்டில் பெரிய அளவில் அயல்நாட்டு முதலீடு இருக்கிறது என்றால் அதில் சீனாதான் முன்னிலை வகிக்கிறது. பல ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் வெளிப்படையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT