Published : 28 Jun 2020 08:47 PM
Last Updated : 28 Jun 2020 08:47 PM
நேபாளத்தில் நடைபெற்று வரும் என் ஆட்சியைக் கவிழக்க இந்தியாவில் சந்திப்புகள், கூட்டங்கள் என்று சதி நடைபெற்று வருகிறது என்று அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலி சாடியுள்ளார்.
மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மதன் பண்டாரி நினைவாக தன் இல்லத்தில் நடத்தியக் கூட்டத்தில் நேபாள் பிரதமர் கே.பி.ஒலி கூறும்போது, “டெல்லியிலிருந்து இது தொடர்பாக செய்திகள் வருகின்றன. நேபாளின் வரைபடத்தை நாங்கள் மாற்றி வெளியிட்டதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனக்கு பெரும்பான்மை உள்ளது அதனால் என்னை ஒன்றும் அசைக்க முடியாது.
நேபாளின் தேசியவாதம் பலவீனமானதல்ல. பிரதமரை 15 நாட்களில் மாற்றிவிடலாம் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச் சமயத்தில் என்னை வெளியேற்றிவிட்டால் நேபாளத்துக்கு ஆதரவாக பேச ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அந்த நபர் உடனடியாக நீக்கப்பட்டு விடுவார். நான் எனக்காகப் பேசவில்லை, நாட்டுக்காகப் பேசுகிறேன். நம் கட்சி, நம் நாடாளுமன்ற கட்சிகள் இந்தப் பொறிகளில் சிக்கக் கூடாது. இதற்காக முயற்சிப்பவர்கள் முயற்சிக்கட்டும். ” என்றார்.
நாடாளுமன்றத்தில் பிரசந்தாவுக்கு எதிர்க்கட்சியினரும் மாதேசி பிரிவு உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT