Published : 28 Jun 2020 01:51 PM
Last Updated : 28 Jun 2020 01:51 PM
கடந்த ஆண்டு ஒரேயொரு மின்னல் ஒளி பிரேசிலில் சுமார் 700 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரத்துக்கு பளிச்சிட்டது புதிய சாதனை என்று ஐநா வானிலை ஏஜென்சி தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்காவின் பாஸ்டன் முதல் வாஷிங்டன் டிசி வரை என்று கூறக்கூடிய தூரத்துக்கு பிரேசிலில் ஒரேயொரு மின்னல் ஒளி அதி தொலைவு வரை தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.
உலக வானிலை அமைப்பின் நிபுணர்கள் குழு இது தொடர்பாக கூறும்போது, மிக தூரம் பிளாஷ் ஆன மின்னலுக்கான, நீண்ட நேரம் பிளாஷ் ஆன இரண்டு மின்னல்கள் குறித்த உலக சாதனை பிரேசில் மற்றும் அர்ஜெண்டினாவில் நிகழ்ந்துள்ளது.
‘மெகாஃபிளாசஸ்’ என்று அழைக்கப்படும் இந்த மின்னல்கள் 2019-ம் ஆண்டு நிகழ்ந்தன.
அர்ஜெண்டினாவில் மார்ச் 4ம் தேதி 2019-ல் ஏற்பட்ட மின்னல் ஒன்று 16.73 விநாடிகள் நீடித்தது ஒரு பெரிய உலக சாதனையாகும்.
2வது மின்னல் பிரேசிலில் 700 கிமீ (சுமார் 400 மைல்கள்) தூரம் அக்டோபர் 31ம் தேதி கடந்த ஆண்டு சென்றது. அதாவது இந்த தூரம் பாஸ்டனுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான தூரத்தின் அளவாகும். அல்லது லண்டனிலிருந்து சுவிட்சர்லாந்தில் உள்ள பேசல் வரையிலான தூர மின்னலாகும்.
இதற்கு முன்பாக அமெரிகவில் உள்ள ஒக்லஹோமாவில் ஜூன் 2007-ல் மெகாபிளாஷ் மின்னல் 321 கிமீ தூரம் வரை பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 28ம் தேதியான இன்று உலக மின்னல் பாதுகாப்பு நாளாகும், இதனையடுத்து அமெரிக்க புவிபவுதிக அமைப்பு இந்த மின்னல்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இது அசாதாரணமான மின்னல், பயங்கரமானது என்று அந்த அமைப்பு இந்த மின்னல்களை வர்ணித்துள்ளது.
இது போன்ற வானிலை அசாதாரணங்களின் அளவுகள் இயற்கையால் என்ன செய்ய முடியும் என்பதற்கான அறிகுறிகளாகும், மேலும் இதனை கணிப்பதற்கான விஞ்ஞான முன்னேற்றத்தையும் இது அறிவிக்கிறது.
மின்னலை அளக்கும் தொழில்நுட்பம் வளர்ந்ததையடுத்து இன்னும் இதைவிட மின்னல்களையும் கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சமீபத்தில் பிஹாரில் மின்னல் தாக்கி 83 பேர் பலியானதும் மின்னலின் அபாயத்தை உணர்த்துகிறது.
உலக வானிலை ஆய்வு அமைப்பு மின்னலின் ஆபத்துகளை விவரித்துள்ளது, மின்னல்களால் உலகில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஜிம்பாபவேயில் 1975-ல் ஒரேயொரு மின்னல் தாக்கி 21 பேர் மரணமடைந்தனர். 1994-ல் எகிப்தின் ட்ரோங்காவில் 469 பேர் பலியாகினர். அதாவது எண்ணெய் கிணறுகளை தாக்க, எரியும் எண்ணெய் வெள்ளமாக ஊருக்குள் புகுந்தது.
மின்னலுக்கும் இடிக்குமான இடைவேளை 30 விநாடிகளுக்கும் குறைவாக இருந்தால் வீட்டுக்குள் இருக்க வேண்டும் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
பிஹாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் இடி, மின்னல்கள் கடந்த 2 நாட்களாக இருந்து வருகிறது. இரு மாநிலங்களிலும் 110 பேர் பலியாக, 32 பேர் காயமடைந்தனர். சொத்துக்களுக்கும் பரவலான சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் உலக மின்னல் பாதுகாப்பு தினமான இன்று மின்னல் என்பது சாதாரணமல்ல எதுவும் மகாமின்னலாக மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT