Published : 25 Jun 2020 07:13 PM
Last Updated : 25 Jun 2020 07:13 PM
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4,044 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்று எண்ணிக்கை 1,92,000 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 148 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,903 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று எண்ணிக்கை 1,92,000 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சிந்து மாகணத்தில் 74,070 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக பஞ்சாப்பில் 71,191 பேர், கைஃபர் பக்துனாக்வாவில் 23,887 பேர், இஸ்லாமாபாத்தில் 11,710 பேர், பலூசிஸ்தானில் 9,817 பேர், பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் 930 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தொடர்ச்சியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 21,835 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 11.7 லட்சம் அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை ஒப்பிடுகையில் பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கையும், கரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரையில் 4.73 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 14,894 பேர் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT