Published : 22 Jun 2020 08:21 AM
Last Updated : 22 Jun 2020 08:21 AM
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் பிர்ச்சாரத்துக்கு தயாரானார், நம் ஊர்களில் கூறுவது போல் ‘அலைகடலென, கடல் அலையென’ திரண்டு வாரீர் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் பிரச்சாரம் பிசுபிசுத்துப் போனது , காரணம் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. இதனால் ட்ரம்ப் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் தோல்வி, மருந்து கண்டுப்பிடிப்புகளில் இடையூறு, இனவெறிப் பிரச்சினை, போராட்டங்கள், கடும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை ட்ரம்பின் செல்வாக்கைக் குறைத்து கருத்துக் கணிப்புகளும் ஜனநாயக வேட்பாளர் பிடனுக்கு ஆதரவாகவே வெளிவந்துள்ளன.
மேலும் துல்சா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் ஊழியர்கள் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் துல்சாவுக்கு புறப்பட்டார் ட்ரம்ப், தன் பிரச்சாரத்தைக் கேட்க அலைகடலென திரண்டிருப்பார்களென்று எதிர்பார்த்தார். ஆனால் 25 பேர்தான் இருந்தனர். 40,000 பேர் வரை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
சனிக்கிழமை மாலை 5:51க்கும் அவர் துல்சா வந்திறங்கினார், அவரிடம் உறுதியளிக்கப்பட்டிருந்த கூட்டத்தை காணோம். இந்தக் கூட்டத்திலும் பேசிய ட்ரம்ப், கரோனா வைரஸ் சோதனைகள் அதிகரிப்பினால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது, சோதனைகளை குறைக்க அறிவுறுத்தியுள்ளேன் என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
கூட்டம் நடந்த அரங்குக்கு வெளியேயும் ட்ரம்ப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் கூட்டம் ஏனோ ரத்து செய்யப்பட்டது.
தனக்கு ஆதரவு குறைவதாக கருதும் ட்ரம்ப் கடும் கோபத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT