Published : 16 Jun 2020 08:45 AM
Last Updated : 16 Jun 2020 08:45 AM
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்ற மலேரியாக் காய்ச்சல் மற்றும் முடக்குவாத சிகிச்சை மருந்தை கோவிட்-19 சிகிச்சையில் அவசரநிலைப் பயன்பாட்டுக்கான உத்தரவை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் திரும்பப் பெற்றது.
மார்ச் 27ம் தேதி ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மாத்திரைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் பயன்படுத்த யுஎஸ்எஃப்டிஏ அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில் பயன்பாட்டு அங்கீகாரத்தை திரும்பப் பெற்ற அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் தனது வெளியீட்டில், “அவசரக்கால பயன்பாட்டுக்கான சட்ட ரீதியான அளவுகோல்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. கோவிட்-19- அவசர சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் சல்ஃபேட், குளோரோகுய்ன் பாஸ்பேட் இரண்டுமே பயனளிக்கவில்லை என்பதால் அதன் பயன்பாட்டுக்கான அனுமதி திரும்ப பெறப்படுகிறது.
இருதய நோய் சிக்கல்கள் மற்றும் சில மோசமான பக்க விளைவுகள் ஆகியவற்றினால் குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்னின் பயனை விடவும் அதனைப்பயன்படுத்துவதால் விளையும் மோசமான இடர்பாடுகள் அதிகமாக இருக்கிறது” என்று கூறியுள்ளது.
ஹைட்ராக்சிகுளோரோகுய்னால் இருதய துடிப்புப் பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதாக ஏற்கெனவே மருத்துவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த உத்தரவின் மூலம் அதிபர் ட்ரம்பின் செல்ல மாத்திரையான ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்பாடு கோவிட்-19 நோயாளிகளைப் பொறுத்தவரை முடிவுக்கு வந்தது.
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஏன் பயன் தராது?- எஃப்டிஏ விளக்கிய 4 காரணங்கள்:
1. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மற்றும் குளோரோகுய்ன் ஆகியவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட டோஸ் அளவுகள் வைரஸை எதிர்க்கும் தன்மைக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.
2. இந்த இரண்டு மருந்துகளும் ஆரம்பத்தில் காட்டிய கரோனா சிகிச்சைக் கூறுகள் சீராக மேன்மேலும் நிரூபிக்கப்படவில்லை, ஆரம்பகாலத்தில் இருந்த பயன் வேகம் அதற்கு இப்போது இல்லை.
3.தற்போதைய அமெரிக்க வழிகாட்டு நெறிமுறைகள் கிளினிக்கல் சோதனைக்கான நோயாளிகள் தவிர மருத்துவமனையின் கரோனா பிற நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது.
4 சமீபத்தில் நடத்தப்பட்ட கட்டுப்பாட்டு மருந்துப் பரிசோதனையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்னால் இறப்பு விகிதம் கட்டுப்பட்டதற்கான, நோயாளிகள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நாட்களில் குறைவோ எதுவும் தென்படவில்லை. மேலும் ஹைட்ராக்சி சிகிச்சை பெறுபவர்களுக்கு வெண்ட்டிலேட்டர் வசதி தேவைப்படுகிறதா என்பதையும் நீக்கமற தெளிவுபடுத்த முடியவில்லை.
எனவே ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்பாட்டை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் திரும்பப் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT