Published : 29 Sep 2015 12:53 PM
Last Updated : 29 Sep 2015 12:53 PM
சிரியா விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடினும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மாறுபட்ட கருத்துக்களை ஐ.நா. பொதுச்சபையில் முன்வைத்தனர்.
இருவரும் தங்களது வெளியுறவுக் கொள்கைகள் குறித்து சுமார் 2 மணி நேரம் பேசினர். இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் கொள்கை அடிப்படையில் குற்றம்சாட்டிக் கொண்டனர்.
மாநாட்டில் கலந்துகொண்ட இருவரும் பின்னர் நேரில் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு சுமார் 1.5 மணி நேரம் நடந்தது.
இதனை அடுத்து மாஸ்கோ புறப்பட்ட விளாடிமிர் புடின் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எங்களது செயலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை புரிந்துகொண்டோம். வேறுபாடு இருந்தாலும் வெளியுறவு கொள்கைகளில் மட்டுமேனும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் நாங்கள் இணைந்து சிந்திக்கின்றோம்" என்றார்.
அதேசமயம் சிரிய அரசுக்கு ஆதரவாகவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படுவதுமே ரஷ்யாவின் கொள்கை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை அதிகாரி, ஒபாமா - புடின் சந்திப்பு குறித்து கூறும்போது, "இரு தலைவர்களும் கொள்கைகளில் தெளிவான முடிவைக் கொண்டுள்ளனர்" என்றார்.
இதனைத் தவிர சிரியா அதிபர் பஷர் அல் ஆசாதுக்கு முழு ஆதரவு அளிப்பதாக ரஷ்யாவும், அவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவும் மாறுபட்ட கொள்கைகளை திட்டவட்டமாக தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT