Published : 14 Jun 2020 08:26 AM
Last Updated : 14 Jun 2020 08:26 AM
அமெரிக்காவில் ஒரு புறம் கரோனா வைரஸ் பரவல் மறுபுறம் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை அடுத்து நிறவெறிக்கு எதிரான போராட்டஙளின் பரவல் என்று தத்தளித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்து மதத்தைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் எம்.பி. துளசி கப்பார்ட் இந்து மாணவர்களிடம் பேசினார், அப்போது அவர் கூறியதாவது:
இது ஒரு குழப்பமான காலக்கட்டம், நாளை எப்படி இருக்கும் என்று யாரும் கூற முடியாது. ஆனால் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்குக் கற்றுக் கொடுத்த பக்தி யோகம் மற்றும் கர்ம யோகம் மூலம் உறுதி, மனவலிமை மற்றும் அமைதியை நாம் எட்ட முடியும்.
இந்த நேரத்தில் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்பதை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இது ஒரு ஆழமான கேள்வி. கடவுளுகும், கடவுளின் குழந்தைகளுக்கும் சேவை செய்வதே நோக்கம் என்பதை நீங்கள் உணர்ந்து விட்டால் நீங்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.
வெற்றி என்பது ஆடம்பரப் பொருட்களால், சாதனைகளால் வரையறுக்கப்படுவதில்லை. சேவையை மையமாகக் கொண்டு அமையும் மகிழ்ச்சியான வாழ்க்கைதான் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT