Published : 13 Jun 2020 04:49 PM
Last Updated : 13 Jun 2020 04:49 PM
சீனாவில் 12 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பெய்ஜிங்கில் 6 பேருக்குக் கரோனா என்பதன் காரணமாக அங்கு பல சந்தைகள் மூடப்பட்டன, அதில் மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தையான ஷின்ஃபாடி சந்தையும் மூடப்பட்டது.
பெய்ஜிங்கில் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் மீன் இறைச்சியில் கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கும் போது 18 புதிய கரோனா தொற்றுக்களில் 11 உறுதி செய்யப்பட்டது, இதில் 6 உள்நாட்டு தொற்றுக்கள் என்று கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று நோய்க்குறி குணங்கள் இல்லாத 7 கரோனா தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இறைச்சி டீலர்கள் உட்பட அனைவருக்கும் நியூக்ளியிக் அமில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
சந்தையில் புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் தொடர்புடைய 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர், ஆனால் இவர்களுக்கு பரிசோதனையில் நெகெட்டிவ் என்று தெரியவந்துள்ளது.
அசோசியேட் பிரஸ் செய்திகளின் படி ஷின்ஃபாடி சந்தையின் அருகேயுள்ள 11 குடியிருப்புகளுக்கு லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் பணியாற்றும் 45 பேருக்கு கரோனா பாசிட்டிவ் தெரியவந்துள்ளது, ஆனால் இவர்களுக்கு அதற்கான நோய் அறிகுறிகள் எதுவுமில்லை.
அரசு செய்தி ஊடகம் ஷின்ஹுவா செய்திகளின் படி ஷின்ஃபாடி சந்தை மொத்த பரப்பளவு 112 ஹெக்டேர்களாகும், இதில் 1500 மேலாண்மை பணியாளர்களும் 4,000த்திற்கும் மேற்பட்ட வாடகைதாரர்களும் உள்ளனர்.
இதனையடுத்து பெய்ஜிங் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
வெள்ளிக்கிழமையன்று கரோனா தொற்றிய இருவர் இறைச்சி ஆய்வு மையத்தைச் சேர்ந்தவக்ர்கள் , இவர்களுக்கு கரோனா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று புதிதாகத் தோன்ற ஆரம்பித்த உடனேயே பெய்ஜிங் தனது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி சந்தைகளை மூட உத்தரவிட்டது.
வெள்ளிக்கிழமை நிலரவரப்படி சீனாவில் மொத்தமாக உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 83,075 ஆக உள்ளது, இதில் 74 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு தீவிர தொற்று பாதிப்பு இல்லை.
மொத்தமாக 78,367 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 4634 பேர் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT