Published : 13 Jun 2020 12:56 PM
Last Updated : 13 Jun 2020 12:56 PM
நிலம், கடல், வான் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக தேவையான முதலீடுகளுக்காகவும் அமெரிக்க ராணுவத்தை அதற்குத்தக நவீனமயப்படுத்துவதற்காகவும் ராணுவத்திற்கு ரூ.55 லட்சம் கோடி ஒதுக்குவதற்கான மசோதா நிறைவேறியது.
இதற்காக வரும் 2020-21 நிதியாண்டில் ராணுவ பட்ஜெட்டிற்கு ரூ.55 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா, ரஷ்யாவுக்கு எதிரான ராணுவப் பலத்தை மேம்படுத்த இந்த பட்ஜெட் தொகை ஒதுக்கீடு பயனளிக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது. ஹைப்பர்சானிக் ஆயுதங்கள், பயோ-டெக்னாலஜி, சைபர் பாதுகாப்பு ஆகிவற்றை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிலம், கடல், வான் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கம் நிலைபெறச் செய்ய முடியும் என்று அமெரிக்கா கருதுகிறது.
அடுத்த தலைமுறை தளவாடங்கள், நவீன அணு ஆயுதங்கள் மூலம் ராணுவத்தை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஏவுகணை உள்ளிட்ட எந்த ஒரு ராணுவ தொழில்நுட்பங்களை அளிப்பதற்கு, ஏவுகணை தடுப்பு சாதனங்களை ஒருங்கிணைப்பதற்கும் இந்த மசோதாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளது, பலியானோர் எண்ணிக்கை 116,831 ஆக உள்ளது வாக்சைன் கண்டுபிடிக்காவிட்டால் பலி எண்ணிக்கை 2 லட்சம் வரையிலும் செல்லும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் இடமில்லை, வென்ட்டிலேட்டர்கள் போதிய அளவில் இல்லை, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது, இவ்வளவு சமூகப் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் போது இப்படிப்பட்ட மசோதாவா என்று அங்கு கல்வியியல் வட்டத்தைச் சேர்ந்தவர்களும் அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT