Last Updated : 24 Sep, 2015 08:05 PM

 

Published : 24 Sep 2015 08:05 PM
Last Updated : 24 Sep 2015 08:05 PM

ஹஜ் பயணிகளின் கட்டுக்கோப்பின்மையே விபத்துக்குக் காரணம்: சவுதி அமைச்சர்

சவுதி அரேபியாவின் மினாவில் ஹஜ் புனித யாத்திரையின் போது பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு 717 பேர் பலியானதற்கு யாத்திரிகர்களின் கட்டுக்கோப்பின்மையே காரணம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் கலீத் அல்-ஃபாலி தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு தொலைக்காட்சியான அல்-எக்பரியாவில் அவர் கூறியதாக வெளியான செய்தி வருமாறு:

யாத்திரிகர்கள் எங்களது அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடைபிடித்திருந்தால் நிச்சயம் இத்தகைய பெருந்துயரம் நிகழ வாய்ப்பில்லை. நாங்கள் கால-அட்டவணை அமைத்துக் கொடுத்தோம், ஆனால் அவர்கள் அதன் படி நடக்கவில்லை. இதுதான் இத்தகைய பெரும் விபத்துக்கு மூல காரணம்.

எங்களது கால-அட்டவணைப்படி அவர்கள் சென்றிருந்தால் நிச்சயம் இத்தகைய விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியதே.

என்று அவர் கூறியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x