Published : 12 Jun 2020 08:23 AM
Last Updated : 12 Jun 2020 08:23 AM
ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் சீனாவின் மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம் என்று ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் பதிலடி கொடுத்துள்ளார்.
கரோனா தொற்று விவகாரத்தில் சீனா அலட்சியமாகச் செயல்பட்டு தீவிரத்தை மறைத்ததால் இன்று உலகம் முழுதும் கரோனா பல நாடுகளின் பொருளாதாரம், சுகாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளது என்று ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியதோடு இது தொடர்பான அமெரிக்க விசாரணைக்கும் ஆதரவு அளித்து சீனாவை பகைத்துக் கொண்டது.
ஆஸ்திரேலியா சீனா இடையே ஆண்டுக்கு ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரோனா விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டினால் ஆஸி.யிலிருந்து மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது. பார்லி இறக்குமதிக்கு அதிக கட்டணம் வசூலித்தது.
மேலும் ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல் நடைபெறுவதால் சீனர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் சீனா தெரிவித்தது. சீன சுற்றுலாப் பயணிகளும் ஆஸ்திரேலியாவைத் தவிர்க்க வேண்டும் என்று சீனா அறிவுறுத்தியது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவே தேவையற்ற மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம். எங்கள் மதிப்புகளை நாங்கள் விற்கத் தயாராக இல்லை.”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT