Last Updated : 07 Jun, 2020 04:57 PM

1  

Published : 07 Jun 2020 04:57 PM
Last Updated : 07 Jun 2020 04:57 PM

முதல் கரோனா வைரஸ் நோயாளி எப்போது கண்டுபிடிக்கப்பட்டார், மனிதர்களுக்கு பரவும் என அறிந்தது எப்போது? வெள்ளை அறிக்கை வெளியிட்டு சீனா விளக்கம்

சீன அதிபர் ஜி ஜிங்பிங் : கோப்புப்படம்

பெய்ஜிங்

உலகளவில் கரோனா வைரஸ் பரவியதற்கு கவனக்குறைவாகச் செயல்பட்ட சீனாதான் காரணம் என்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் கரோனா வைரஸ் எப்போது கண்டறியப்பட்டது, மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு எப்போது பரவும் என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டு சீனா விளக்கம் அளித்துள்ளது

இந்த வெள்ளைஅறிக்கையை சீன அரசு வெளியிட்டு ,உலக நாடுகள் தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு நீண்ட விளக்கத்தையும் பதிலையும் அளித்துள்ளது.

சீனாவின் வூஹான் சந்தையில் பரவியது கரோன வைரஸ் அல்ல , சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அவருக்கு ஆதராவாக ஐரோப்பிய நாடுகளும் சீனாவை குற்றம்சாட்டி, வெளிப்படைத்தன்மையுடன் கரோனா விவகாரத்தில் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளன.

சீனாவில் உருவான கரோனா வைரஸால் சீனாவில் 84 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில்தான் மிகமோசமான பாதிப்பு ஏற்பட்டு ஒரு லட்சம் பேர் வரை இறந்தனர், 19 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளும் மிகமோசமான பாதிப்பை அடைந்துள்ளன. உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பெரும் பாதி்ப்பை எதி்ர்கொண்டுள்ளன, கரோனாவுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார மந்தத்திலிருந்து உலக நாடுகள் பெரும்போராட்டத்துக்கு பின் மீள வேண்டிய சூழல்இருக்கிறது என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

இந்த சூழிலில் உலகமே தங்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அது குறித்து சீன அரசு வெள்ளை அறிக்கைய வெளியிட்டு விரிவான விளக்கத்தை அளித்துள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இதன்படி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வூஹான் மருத்துவமனை ஒன்றில் கண்டறியப்பட்டார்.அதன்பின் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் மருத்துவ வல்லுநர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த நோயாளியின் உடல்நிலை மற்றும் தாக்கம் குறித்துஆய்வு செய்து தொற்று குறித்த ஆய்வை மேற்கொள்ளுமாறும், ஆய்வுக்கூட சோதனையை தொடங்குமாறும் கேட்டுக்கொண்டார்கள்

ஆனால், முதல்கட்டமாக அந்த நோயாளிக்கு ஏற்பட்ட தொற்றைப் பார்த்து வைரஸ் நிமோனியா என்றுதான் கணி்த்தார்கள். அதன்பின் தேசிய சுகாதார ஆணையம்(என்ஹெச்சி) மூலம் மருத்துவ வல்லுநர்கள் அந்த நோயாளியையும், வைரஸையும் ஆய்வு செய்து இது மனிதர்களுக்கு இடையே மனிதர்கள் மூலம் பரவக்கூடிய வைரஸ் என்று 2020, ஜனவரி 19-ம் தேதி அறிவித்தார்கள்.

உலக மருத்துவ வல்லுநர்கள் கரோனா குறித்து அறிவிக்கும் ஒரு மாதத்துக்குமுன்புதான் சீன மருத்துவ வல்லுநர்கள் கரோனா குறித்து அறிந்தார்கள். ஜனவரி 19-ம் தேதிக்கு முன்பாக, இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா என்பது குறித்த போதுமான ஆதாரங்கள் கிைடக்கவில்லை என்று சீனாவின் புகழ்பெற்ற நுரையீரல் வல்லுநர் வாங் குவாங்பா தெரிவித்துள்ளார்

நுரையீரல் வல்லுநர் வாங் குவாங்பா கூறுகையில் “ மருத்துவ வல்லுநர்கள் குழு வூஹான் நகரத்துக்கு ஜனவரி மாதம் சென்றபோது ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள், ஆனால், எவ்வாறு பரவியது, ஹூனன் சந்தையிலிருந்து காய்ச்சல் பரவியதா என்பது குறித்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் வவ்வால்கள், எறும்புதின்னிகள் மூலம் மனிதர்களுக்கு பரவியதாக நம்பப்பட்டாலும் அதற்கான ஆதாரம் இல்லை. ஆய்வுகள் மூலமே இதை அறிய முடியும், மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய தன்மையுள்ளதா எனக்கண்டறிய முடியும் என நம்பினோம்.

இதையடுத்து, இறுதியற்ற சூழல் நிலவியதால், கரோனா வைரஸைத் எதிர்த்துப் போராட வூஹான் நகரம், ஹூபே மாநிலமே ஜனவரி 14-ம் தேதி தயாராகியது” எனத் தெரிவித்தார்

சீனாவின் மற்றொரு நுரையீரல் வல்லுநர் ஹாங் நான்ஷன் கூறுகையில் “ குவாங்டாங் நகரில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஜனவரி 20-்ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது அப்போதுதான் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவம் என்பதை உறுதி செய்தோம்”எனத் தெரிவித்தார்

சீனாவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநர் குவா யூ கூறுகையில் “ மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு கரோனா பரவும் என்பதை கடந்த ஜனவரி 19-ம் தேதிதான் கண்டறி்ந்து உறுதி செய்தோம். உடனடியாக வூஹான், ஹூபே மாநிலம் முழுவதும் தொற்று நோய் குறித்த விசாரணை, சிகிச்சையைத் தொடங்கி விரைவுப்படுத்தினோம்.

அதன்பின் சிறிதுகூட தாமதிக்காமல் உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கரோனா வைரஸ் குறித்த அறிவிப்பை தெரிவித்து அது பெருந்தொற்றாக மாறலாம் என எச்சரித்தோம்.

வூஹான் மாநிலத்தில் சமூகப்பரவல் நடந்து, அது பல்வேறு நகரங்களுக்கும் வைரஸ் பரவியது.அதன்பின் தேசியஅளவில் வைரஸைக் கட்டுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது “ எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x