Published : 03 Jun 2020 02:40 PM
Last Updated : 03 Jun 2020 02:40 PM
ஜார்ஜ் பிளாய்ட் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதையடுத்து அதிபர் மாளிகை வரை பரவிய நிறவெறி எதிர்ப்புப்போராட்டத்தில் அமைதிவழியில் போராட்டம் நடத்தியவர்களை அதிபர் ட்ரம்ப் பலவந்தமாக அப்புறப்படுத்தினார்.
காரணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித ஜான் சர்ச்சின் முன்னால் தன் கையில் பைபிளுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதற்காக அமைதிப் போராட்டக் காரர்களை பலப்பிரயோகம் செய்து அப்புறப்படுத்தப்பட்டது, வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி உட்ப ட்ரம்ப் நிர்வாகத்தின் பல அதிகாரிகளுக்கும் கடும் எரிச்சலையும் அருவருப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
பெயர் கூற விரும்பாத அந்த வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி, “நான் என்றுமே இப்படி அவமானமாக உணர்ந்ததேயில்லை. நேர்மையாகவே நான் மிகவும் அருவருப்படைந்தேன், வெறுப்படைந்தேன். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது. ஆனால் அவர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்கள் தாங்களே பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.
இவரது பேச்சு அமெரிக்காவில் இணையதளங்களில் சரமாரியாக வைரலானது.
அதாவது அதிபர் ட்ரம்பின் இந்தச் செயல் மட்டுமல்ல பல செயல்கள் அவர் நிர்வாக அதிகாரிகளிடையே கூட கடும் அருவருப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உதாரணமாக இந்த அதிகாரியின் கூற்று அங்கு பார்க்கப்படுகிறது.
இது போன்ற விஷயங்களையெல்லாம் பெயருடன் வெளியிட வேண்டும் என்று அந்த அதிகாரிக்கு பலரும் கூறிவருகின்றனர், ஆனால் பெயர் வெளியிட்டால் அதுதான் அவர் ஒயிட் ஹவுஸ் பணியின் கடைசி நாளாக இருக்கும் என்றும் பலரும் பெயர் வெளியிடாமைக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
திங்கள் இரவு அதிபர் பைபிளுடன் போஸ் கொடுத்த நிகழ்ச்சியை அங்கு பலரும் படுமோசமாக விமர்சித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment