Published : 03 Jun 2020 10:43 AM
Last Updated : 03 Jun 2020 10:43 AM
நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்று கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை கிளப்பியுள்ளது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில் போராட்டக்கார்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், ”அமெரிக்காவில் நடப்பதை நாங்கள் கலக்கத்துடன் பாத்துக் கொண்டு இருப்பதாகவும், இது மக்களை ஒருங்கிணைப்பதற்கான நேரம். அவர்களின் குரல்களை கேட்பதற்கான நேரம்” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் அமெரிக்காவில் 15,846 பேருக்கு கரோனா தொற்று
அமெரிக்காவில் வெகுண்டு எழுந்துள்ள போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த 24 மணி நேரத்தில் 15, 846 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ பல்கலைகழகமான ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்ட தகவலில், “ அமெரிக்காவி கடந்த 24 மணி நேரத்தில் 15,846 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்குபாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18, 27,206 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 863 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,06,028 ஆக அதிகரித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT