Published : 29 May 2020 08:28 PM
Last Updated : 29 May 2020 08:28 PM
கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையேயான விமான சேவையை, பாகிஸ்தான் அரசு நாளை முதல் தொடங்க உள்ளது.
கரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பெரும்பாலான நாடுகள் அதன் எல்லைகளை மூடின. விமான சேவை உட்பட அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆகியுள்ளநிலையில், பல நாடுகள் அதன் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்தி வருகின்றன.
பாகிஸ்தான் அரசு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கிடையேயான விமான சேவையைத் நாளை முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ”உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள், பாகிஸ்தான் பன்னாட்டு விமான நிலையங்களிலிருந்து இயக்கப்பட அனுமதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 64,028 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 22,305 பேர் குணமாகியுள்ளனர்; 1,317 பேர் பலியாகியுள்ளனர்.
உலக அளவில் கரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வருகிற நிலையிலும், பல நாடுகள் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கை தளர்த்தி வருகின்றன. தீவிர கண்காணிப்புடன் விமானப் சேவையத் தொடங்க முடிவெடுத்துள்ளன. இந்தியா சில தினங்களுக்கு முன் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT