Published : 29 May 2020 09:09 AM
Last Updated : 29 May 2020 09:09 AM
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்து 68 ஆயிரத்து 461 ஆக அதிகரிக்க, பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து 103,330 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கையும் 5 லட்சத்தை நெருங்குகிறது.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப், “கரோனா வைரஸ் அனைத்துலக மக்கள் தொற்றின் பலி எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்த துயரம்தரும் மைல்கல்லை எட்டியுள்ளோம். உறவினர்கள, நண்பர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் இதயபூர்வ இரங்கல்கள். இந்த அசாதாரண மக்கள் எதைத் தாங்கும் பிரதிநிதிகளாக நின்றனரோ அதற்கான என்னுடைய அன்புகள். கடவுள் உங்கள் பக்கம் இருப்பார்.
உலகம் முழுதுக்கும் கரோனா வைரஸ் எனும் அனைத்துலக பெருந்தொற்று சீனாவின் மிக மோசமான ஒரு பரிசு, எதுவும் நல்லதாக இல்லை” என்று இரண்டு ட்வீட்களில் கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்படும் ஜோ பிடன், “வரலாற்றில் சில இருண்ட தருணங்கள் உண்டு. இது நாம் பகிர்ந்து கொள்ளும் ஒரு துயரமாக என்றென்றும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT