Published : 27 May 2020 11:25 AM
Last Updated : 27 May 2020 11:25 AM
சீன வீரர்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கான ஆயத்த நிலையில் இருக்கவும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதோடு சீன அதிபரும் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.
தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க ரோந்துக் கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கரோனாவைப் பரப்பியது சீனாதான் என்று அமெரிக்காவும், அமெரிக்காதான் என்று சீனாவும் மாறி மாறிக் குற்றம்சாட்டி வரும் நிலையில் அமெரிக்கா சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பலநாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எனவே இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான போர் முழக்கமாகவும் சீன அதிபரின் இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தப் பின்னணியில்தான் அதிபர் ஷி ஜின்பிங் ராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவுப் பிறப்பித்ததாக சீன அரசு செய்தி நிறுவனமான சினுவா தெரிவித்துள்ளது.
சீன ராணுவம் பயிற்சியைக் கூட்ட வேண்டும், எந்த ஒரு மோசமான சூழலுக்கும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜின்பிங் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியான 2வது மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT