Published : 26 May 2020 02:41 PM
Last Updated : 26 May 2020 02:41 PM
அமெரிக்காவில் உள்ள இந்தியத் தம்பதி கரோனா நோயாளிகளுக்குப் பயன்படும் குறைந்த விலை போர்ட்டபிள் வென்ட்டிலேட்டர்களைத் தயாரித்துள்ளனர்.
இது விரைவில் உற்பத்தி நிலையை எட்டி இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு வென்ட்டிலேட்டர்களின் பங்களிப்புகளை அடுத்தும் அது பெரிய எண்ணிக்கையில் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும் தேவேஷ் ரஞ்சன் இவரது மனைவி குமுதா ரஞ்சன் ஆகியோர் இந்த குறைந்த விலை வென் ட்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளனர்.
தேவேஷ் ரஞ்சன் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜார்ஜியா டெக்கின் ஜார்ஜியா வுட்ரஃப் ஸ்கூல் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கின் அசோசியேட் தலைமைப் பொறுப்பில் உள்ளார். மனைவி குமுதா ரஞ்சன் அட்லாண்ட்டாவில் மருத்துவராக இருந்து வருகிறார்.
எமர்ஜென்சி வென்ட்டிலேட்டர்கள் என்ற ஐடியாவை 3 வாரக் காலக்கட்டத்தில் ஒரு தயாரிப்பாக உருவாக்கியுள்ளனர்.
“இதனை பெரிய எண்ணிக்கையில் உற்பத்தி செய்தோமானால் 100 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான அடக்கவிலையில் உற்பத்தி செய்ய முடியும். 500 டாலர்கள் சந்தை விலை நிர்ணயித்தாலும் கூட வாங்கவும் முடியும் அதே வேளையில் உற்பத்தியாளர்களுக்கு லாபமும் கிடைக்கும்” என்று பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன் பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், ‘இத்தகைய வென்ட்டிலேட்டர்கள் அமெரிக்காவில் 10,000 டாலர்கள் விலைக்குத்தான் கிடைக்கும்’ என்றார்.
ஆனால் மேம்பட்ட ஐசியு வென்ட்டிலேட்டர்கள் அல்ல இது என்கிறார் தேவேஷ் ரஞ்சன். அதைத் தயாரிக்க பெரிய அளவு செலவாகும்.
இது ஓபன் ஏர் வென்ட் ஜிடி வென்ட்டிலேட்டர் ஆகும். கோவிட் 19 நோயாளிகளுக்குப் பொதுவாக ஏற்படும் தீவிர உடனடி சுவாசப்பிரச்சினைக்கு உதவும் வென் ட்டிலேட்டர்கள் ஆகும் இவை.
கரோனா வைரஸ் பெரிய அளவில் உலகம் முழுதும் பரவி வருவதால் வென்ட்டிலேட்டர்களுக்கு அதிக தேவை இருக்கிறது என்கிறார் குமுதா ரஞ்சன்.
தேவேஷ் ரஞ்சன் பிஹாரில் பிறந்து வளர்ந்தாலும் திருச்சி ஆர்.இ.சி.யில் தான் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார்.
இந்தியாவுக்கு குறைந்த விலை வென்ட்டிலேட்டர்கள் தயாரிக்கும் ஆற்றல் இருக்கிறது. தயாரித்து உலகம் முழுதும் இந்தியா ஏற்றுமதி செய்யலாம் என்று தேவேஷ் ரஞ்சன், குமுதா ரஞ்சன் தம்பதி நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT