Published : 25 May 2020 07:59 PM
Last Updated : 25 May 2020 07:59 PM
பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளாகி 97 பேர் பலியான சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் லாகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது சிக்னலை இழந்தது. இதனைத் தொடர்ந்து கராச்சி நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
தற்போது இந்த விமான விபத்தில் 97 பேர் பலியாகியுள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த முகமத் சுபைர் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் பேசினார்.
அதில் முகமத் கூறும்போது, ''விபத்து நடந்த பிறகு என்னைச் சுற்றி நெருப்பு எரிந்ததையே என்னால் பார்க்க முடிந்தது. சுற்றிலும் புகையாய் இருந்தது. என்னால் மக்களைப் பார்க்க முடியவில்லை. அவர்களின் அலறல் சத்தம்தான் கேட்டது” என்று தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளான பயணிகள் விமானம், மூன்று முறை தாழ்வாகப் பறந்தது குறித்து விமானக் கட்டுப்பாட்டு அறை எச்சரித்துள்ளது. ஆனால், விமானத்தை உயரே செலலுத்த முடியவில்லை என்று விமானி தெரிவித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT