Published : 10 Aug 2015 04:12 PM
Last Updated : 10 Aug 2015 04:12 PM
ஆப்கானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக காபூல், இஸ்லாமாபாத், டெல்லி, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களிலும் தாக்கம் ஏற்பட்டது.
ஆப்கானில் உள்ள ஃபெய்சாபாத்துக்கு 88கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகவும், ரிக்டர் அளவில் 6.2 என்று பதிவானதாகவும் அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 209 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT