Published : 22 May 2020 09:19 PM
Last Updated : 22 May 2020 09:19 PM

எகிப்தில் ஜூலை 16-க்கு பிறகு கரோனா தொற்று குறையும்: அமைச்சர் நம்பிக்கை

எகிப்தில் ஜூலை 16-க்கு பிறகு கரோனா தொற்று முற்றிலும் குறையும் என்று எகிப்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் காலித் அப்தல் ஹாஃபர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உயர் கல்வி துறை அமைச்சர் காலித் அப்தல் ஹாஃபர் கூறும்போது, “ எகிப்தில் புதன்கிழமை வரையில் 14,229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போதைய நிலை தொடரும்பட்சத்தில் ஜூலை 16 வரையில் 37,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்படக் கூடும். அதன் பிறகு புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாது என்று எதிர்பார்க்கிறோம். நாளொன்றுக்கு 500 முதல் 1,000 வரையில் தொற்று உறுதியாவது இயல்பானது.

அந்தவகையில் எகிப்தில் கரோனா தொற்று அச்சுறுத்தும் அளவில் அதிகரிக்கவில்லை. இது தொடர்ந்தால் மே 28-ல் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 20,000 -ஐ தொடும். ஜூலை 16-க்கு பிறகு தொற்று முற்றிலும் இருக்காது” என்று தெரிவித்தார்.

கடந்த ஞாயிறு முதல் புதன் வரையில் தினசரி கணக்கில் அதிக அளவில் எகிப்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது, புதன்கிழமை மட்டும் 745 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே எகிப்தில் ஒருநாளில் பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாகும்.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், மற்றொரு முக்கிய நகரமான கிசாவிலும் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

9.84 கோடி மக்கள் தொகை கொண்ட எகிப்தில், இதுவரையில் 15,003 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 4,217 பேர் குணமாகியுள்ளனர். 696 பேர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x