Published : 20 May 2020 07:31 PM
Last Updated : 20 May 2020 07:31 PM
தென்கொரியாவில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு பள்ளிகள் மூடப்பட்டன.
இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள் தரப்பில், “தென்கொரியாவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்பட்டன. பள்ளி வளாகத்துக்குள் நுழையும் மாணவர்களின் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இரு மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு வந்திருந்த பிற மாணவர்களும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்” என்று செய்தி வெளியானது.
தென்கொரியவில் கரோனா தொற்று ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு இணைய வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சில பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அந்தவகையில் முதல் நாளான இன்று பள்ளிகள் திறப்பட்ட நிலையில் மாணவர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.
கரோனா பரவலால் கடந்த இரு மாதங்களாக ஊரடங்கை அமல்படுத்தி இருந்த பல நாடுகள் தற்போது ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. எனினும் பல நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை
தென்கொரியாவில் 11,110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 263 பேர் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT