Published : 20 May 2020 07:23 AM
Last Updated : 20 May 2020 07:23 AM

பிரேசிலில் 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு  1,179 பேர்பலி: இதுவரை பலி 17,971; மொத்த பாதிப்பில் பிரிட்டனை முந்தியது

பிரேசிலில் உள்ள பார்க் தருமா இடுகாட்டில் பெரிய எண்ணிக்கையில் கரோனா மரண உடல்கள் புதைப்பு. | கெட்டி இமேஜஸ்.

கரோனா வைரஸின் தாக்கத்தை அந்நாட்டுஅதிபர் ஜெய்ர் போல்சனாரோ தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் அங்கு 24 மணி நேரத்தில் 1,179 உயிர்களை பலி வாங்கியது கரோனா, இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 17,971 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பாக மே 12ம் தேதியன்று ஒரே நாளில் 881 பேர் கரோனாவுக்குப் பலியானதையடுத்து அடுத்த மரண விகிதம் ஒரே நாளில் அதிகரித்து 1179 பேர் பலியாகினர். பார்க் தருமா இடுகாட்டில் பெரிய எண்ணிக்கையில் ஒரே நாளில் பிணங்கள் புதைக்கப்பட்டன.

இதனையடுத்து பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்குள் வர தடை விதிக்க ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார்.

அதே போல் உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்று எண்ணிக்கையில் பிரிட்டனைக் கடந்து 2,71,629 பாசிட்டிவ் தொற்றுகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. இதற்கு மேல் அமெரிக்கா, மற்றும் ரஷ்யா உள்ளது.

அதிபர் போல்சனாரோவின் இடைக்கால சுகாதார அமைச்சர் எட்வர்டோ பாஸுயெல்லோ புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாட்டை அதிக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “பிரேசிலிலிருந்து இங்கு வந்து அமெரிக்கர்களை வைரஸ் தொற்று பீடிப்பதை நான் விரும்பவில்லை. அங்கும் மக்கள் நோயால் அவதிப்படுவதையும் விரும்பவில்லை, எனவே பிரேசிலுக்கு வெண்ட்டிலேட்டர்களை அளிக்கிறேன். பிரேசில் சிக்கலில் உள்ளது, இதில் எந்த வித சந்தேகமும் இல்லை” என்றார்.

அமேசான் மூவெல்லை பகுதிகளான கொலம்பியா, பெரூ, மற்றும் பிரேசில் ஆகியவற்றின் பொது எல்லைப்பகுதிகளில் கரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அனைத்து அமெரிக்கச் சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

உலக அளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3,24,889 ஆக உள்ள போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x