Published : 16 May 2020 08:43 AM
Last Updated : 16 May 2020 08:43 AM
கோவிட்-19 எனும் கரோனா வைரஸ் நோய்க்கு நிறைய சிகிச்சைகள் கிளினிக்கல் சோதனைகளில் உள்ளன, ஆனால் இதில் எதையும் இன்னும் முறையான சிகிச்சையாக அங்கீகரிக்கவில்லை என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலகச் சுகாதார அமைப்பு கூறியதாவது:
“நூற்றுக்கணக்கில் மருத்துவ சோதனைகள் நடந்து வருகின்றன, இந்த மருந்துகள் எப்படி வேலை செய்யும் என்பதை தெள்ளத் தெளிவாக அறியக் காத்திருக்கிறோம், அதாவது கரோனா தொற்றைத் தடுப்பது அல்லது தீவிர நிலைக்கு கரோனா நோய் செல்லாமல் எப்படித் தடுக்கிறது, மரணத்தை தடுக்கிறதா?, பாதுகாப்பானதா, பக்கவிளைவுகள் உண்டா என்ற ரீதியில் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
இப்போதைக்கு உலகச் சுகாதார அமைப்பு ‘ஒற்றுமை சோதனை’-யை அறிமுகம் செய்துள்ளது. இது சில மருந்துகளைக் கொண்டு செய்யப்படும் பரிசோதனைகளாகும், இந்த ஒற்றுமை சோதனைகாக 2,500-க்கும் அதிகமான நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எந்த சிகிச்சை கரோனாவுக்கு பதிலாக அமையும் என்பதைத் தீர்மானிக்க சில காலம் பிடிக்கும், இப்போதைக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் மருந்துகள் இல்லை.
நன்கு பரிசோதைக்கப்படும் நடைமுறைகளாகும் இவை. எனவே நாம் புதுமையை ஊக்குவிக்க வேண்டும். முதலில் மருந்துகள், சிகிச்சைகள் தீங்கு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.
இந்த ஒற்றுமை சோதனையில் ரெம்டெசிவைர், ஹைட்ராக்சிகுளோரோகுய்ன், லொபினவிர், ரிடோனவிர் மற்றும் லொபினவிர், ரிடோனவிர் சேர்க்கையுடன் இண்டெர்பெரான் பீட்டா 1ஏ ஆகியவற்றை சேர்த்துக் கொடுக்கப்படும். இந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கரோனா பாதிப்பு நோயாளிகளுக்குத்தானே தவிர கரோனா இருந்து அறிகுறிகள் இல்லாதவர்களுக்கானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT