Published : 13 May 2020 02:27 PM
Last Updated : 13 May 2020 02:27 PM
கரோனா தொற்றுநோய் காலத்திலும் ஈரான் பயங்கரவாதத்தைத் தூண்டுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
கரோனா தொற்றுக்கு மத்தியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இஸ்ரேலுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தனது இஸ்ரேல் பயணத்தில் ஈரானின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து மைக் பாம்பியோ விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மைக் பாம்பியோ கூறும்போது, ''இந்தத் தொற்றுநோய் காலகட்டத்தில், மக்கள் போராடிக் கொண்டிருந்தாலும் ஈரான் அரசு பயங்கரவாதத்தைத் தூண்ட தனது வளங்களைப் பயன்படுத்துகிறது'' என்று விமர்சித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, ''பாம்பியோவின் இப்பயணம் அமெரிக்கா - இஸ்ரேல் உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்தார்.
மேலும், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு நெதன்யாகு பாராட்டு தெரிவித்தார்.
ஈரான் கடல் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பாரசீக வளைகுடாவில் வலம் வரும் அமெரிக்கப் போர்க் கப்பலுகளுக்கு ஈரானிய போர்க் கப்பல்கள் நெருக்கடியைத் தருவதாகவும், அவ்வாறு ஈரானியக் போர்க் கப்பல்கள் அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டுக் கப்பற்படைக்கு சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT