Published : 13 May 2020 11:15 AM
Last Updated : 13 May 2020 11:15 AM

கரோனா வைரஸ் பாதிப்பு: இத்தாலியில் தொற்று குறைந்தாலும் அதிகரிக்கும் இறப்பு

இத்தாலியில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் உயிரிழப்புகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு அமைப்பு கூறும்போது, “இத்தாலியில் செவ்வாய்க்கிழமை சுமார் 743 பேர் பலியாகினர். இது கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதிக்குப் பிறகு இத்தாலியின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகும். இத்தாலியில் கடந்த மாதம் மட்டும் 6,820 பேர் கரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் உயிரிழப்பு ஒருபுறம் அதிகரித்து கொண்டிருக்க, நோய்த்தொற்று குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ''கரோனா வைரஸ் ஆரம்பக் கட்டத்தில் கடும் தீவிரத்தன்மை கொண்டிருந்தது. ஆனால் தற்போது அதன் தீவிரம் குறைந்திருக்கிறது. உதாரணமாக மார்ச் இறுதி முதல் ஏப்ரல் முதல் பாதி வரையில் தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை மிக அதிக அளவில் இருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல வைரஸ் அதன் தீவிரத்தை இழக்கும் என்று நம்புகிறோம். சொல்லப்போனால் சளியை ஏற்படுத்தும் வைரஸ் போலவே கரோனா வைரஸும் தன்மை மாற்றம் அடையும்'' என்று இத்தாலியின் சான் ரஃபேல் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் மற்றும் வைராலஜி பிரிவின் இயக்குநர் மஸ்ஸிமோ க்லெமெண்டி தெரிவித்திருந்தார்.

இத்தாலியில் இதுவரையில் 2.2 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,360 பேர் பலியாகி உள்ள நிலையில், 1 லட்சம் பேர் குணமாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x