Published : 12 May 2020 11:57 AM
Last Updated : 12 May 2020 11:57 AM

நியூயார்க்கில் கரோனா பலி எண்ணிக்கை தற்போதைய நிலவரத்தை விட அதிகம்

நியூயார்க்கில் கரோனா தொற்றால் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை தற்போதுள்ள நிலவரத்தைவிட அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் திங்கட்கிழமை வெளியிட்ட தகவலில், “நியூயார்க்கில் கரோனா வைரஸால் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையைவிட ஆயிரம் கூடுதலாக இருக்கும்.

மார்ச் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து மே மாதத் தொடக்கம்வரை நியூயார்க்கில் 24,000 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகப்படியான இறப்புகள் சுவாசக் கோளாறு, இதய பாதிப்பால் ஏற்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகள் கரோனா வைரஸுடன் தொடர்புடையதுதான். ஆனால் இவை கரோனா வைரஸ் பாதிப்புடன் நேரடியாக
தொடர்புபடுத்தப்படாமல் போகலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிற மாகாணங்களைவிட நியூயார்க்கில் கரோனா தொற்று அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை நியூயார்க் அரசு அறிவிக்காவிட்டாலும், பள்ளி, கல்லூரிகளை ஆரம்ப நிலையிலேயே மூடிவிட்டது. இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டு முழுமைக்குமாக பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 21,478 பேர் பலியாகி உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 13,85,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 81,795 பேர் பலியாகினர். 15, 7,517 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x