Published : 11 May 2020 07:52 PM
Last Updated : 11 May 2020 07:52 PM

கனடா பள்ளி மாணவர்களுக்காக மீண்டும் ஆசிரியராக மாறிய கனடா பிரதமர்

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நிலவும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் பெற்றோர்களே. ஒருவேளை நீங்கள் உங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாடக் கேள்விகளால் சிக்கிக் கொண்டீர்களா?

நானும் ஒரு ஆசிரியர்தான். நான் உதவ விரும்புகிறேன். #CanadaHomeworkHelp பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள். என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

— Justin Trudeau (@JustinTrudeau) May 10, 2020

கனடாவுக்கு பிரதமராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், ஜஸ்டின் ட்ரூடோ பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். இதில் ஆசிரியர் பணியும் ஒன்று.

கனடாவில் கரோனா தொற்றுக்கு 68,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,870 பேர் பலியாகினர். 32,096 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ், 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் 41,02,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,82,719 பேர் பலியாகியுள்ளனர். 14,93,490 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x