Published : 09 May 2020 03:57 PM
Last Updated : 09 May 2020 03:57 PM

பிலிப்பைன்ஸ்: கரோனாவுக்கு 700க்கும் அதிகமானவர்கள் பலி

பிலிப்பைன்ஸில் கரோனாவால் 700க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறும்போது, “ பிலிப்பைன்ஸில் கரோனாவால் 700க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸில் கரோனா தொற்றால் இதுவரை 10,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை பெரும்பான்மையான நாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸிலும் மே 15 ஆம் தேதிவரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் ஊரடங்கை மீறும் மக்கள் ராணுவத்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஊரடங்கை உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x