Published : 09 May 2020 01:13 PM
Last Updated : 09 May 2020 01:13 PM
கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் முன்னரே தயாராகியிருக்க வேண்டும். இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்துவிட்டார் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் கரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பிடன் கூறும்போது, “அதிபர் ட்ரம்ப் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் முன்னரே தயாராகியிருக்க வேண்டும். அதைத் தவறவிட்டுவிட்டார். இதன் காரணமாக நமது தேசம் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் அமெரிக்காவில் பறிபோயின. பல சிறு வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ட்ரம்ப் அரசு பணக்காரர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும் மட்டுமே உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா தொற்றால் 13, 22,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,616 பேர் பலியாகியுள்ளனர். 2,23,749 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 40,14,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,76,237 பேர் பலியாகி உள்ளனர். 13, 87,181 பேர் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT