Published : 09 May 2020 07:48 AM
Last Updated : 09 May 2020 07:48 AM
கரோனா வைரஸ் தாக்கம் இன்னும் ஓயவில்லை, பிரிட்டனில் மேலும் 626 பேர் கரோனாவுக்குப் பலியாக மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 31,241 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகள், காப்பகங்கள், வீடுகள் என்று கரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்று சுற்றுச்சூழல் செயல்ர் ஜார்ஜ் யூஸ்டிஸ் தெரிவித்தார்.
பிறந்து 6 வாரங்களே ஆன கைக்குழந்தை ஒன்று கரோனாவுக்குப் பலியாகியுள்ளது.
16 மில்லியன் பவுண்டு நிவாரணத்தொகையை பிரிட்டன் அறிவித்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்டோர் மற்றும் நலிவுற்றோருக்காக இந்த நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் லாக் டவுன் நடவடிக்கைகளிலிருந்து மீளுவது எப்படி என்ற கேள்விக்குப் பதிலளித்த யூஸ்டிஸ் ‘இது ஒரே நாள் இரவில் மாற்றிவிடக் கூடியது அல்ல. படிப்படியான தளர்வுகளே சாத்தியம்’ என்றார்.
லாக் டவுன் தளர்வுகள் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஞாயிறன்று பிரிட்டன் மக்களுக்கு உரையாற்றவிருக்கிறார்.
“தளர்வுகள் குறித்து நாங்கள் மிக மிக எச்சரிக்கையுடனேயே செய்வோம். தினசரி கரோனா பாதிப்பு நாம் இன்னும் இதிலிருந்து வெளியே வரவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த வைரஸ் மூலம் எதிர்காலத்திலும் பல சவால்கள் காத்திருக்கிறது.
எனவே இரண்டாவது அலை அடிக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம். எனவே ஊரடங்கு தளர்வுகளை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது மிகமிக எச்சரிக்கையுடனேயே செய்ய முடியும்.” என்று யூஸ்டிஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT