Published : 09 May 2020 06:59 AM
Last Updated : 09 May 2020 06:59 AM
கரோனா வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோராகுவின் என்ற மருந்து வழங்கப்பட்டு வந்தது. தற்போதுரெம்டெசிவிர் எனும் மருந்து கரோனாவுக்கு எதிராக தீவிரமாக செயல்படுகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இந்த மருந்து கடந்தஜனவரி மாதத்திலேயே பயன்பாட்டுக்கு வந்தது. கரோனா தொற்று மிதமான மற்றும் தீவிர நிலையில் உள்ளவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
மேலும் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டது. சமீபத்திய ஆராய்ச்சி முடிவின்படி இம்மருந்தை எடுத்துக் கொள்பவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைவதாகத் தெரிகிறது. அமெரிக்க மருத்துவ நிபுணர் ஆண்டனி ஃபாசி, இம்மருந்தால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த வகையான ரெம்டெசிவிர் மருந்துகள் அமெரிக்காவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒரு நோயாளிக்கு இந்த மருந்தைச் செலுத்த 10 அமெரிக்க டாலர்கள் முதல் 4,500 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும் என இதைத் தயாரித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த கிலாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை மருந்துகளை கரோனாநோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (எப்டிஏ) அனுமதி அளித்துள்ளது. ஆனால் கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் அதிக விலைக்கு இந்த மருந்தை விற்பனை செய்கிறது என வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ரெம்டெசிவிர் மருந்து விலை தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு கிலாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேனியர் ஓ டே பதில் அளிக்கவில்லை.
இதேபோன்றுதான் 2013-ம்ஆண்டில் ஹெபடைடிஸ் சி பிரச்சினைக்கு, சோவல்டி என்ற மருந்தை அறிமுகம் செய்தது கிலாட் நிறுவனம். அப்போது ஒரு மாத்திரையை 1,000 அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனம் விற்பனை செய்தது.
தற்போது இன்ஸ்டிடியூட் ஃபார்எகனாமிக்கல் அண்ட் கிளினிக்கல் ரிவ்யூ (ஐசிஇஆர்) அளித்த அறிக்கையில் 10 நாட்களுக்கு சிகிச்சைக்குத் தேவைப்படும் இந்த மருந்தின் விலையானது 9.32 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. அதாவது 10 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவு என்று தெரிவிக்கிறது. ஆனால் மருந்தை அதிக விலைக்குகிலாட் நிறுவனம் விற்று லாபம் பார்க்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT