Published : 27 Aug 2015 10:35 AM
Last Updated : 27 Aug 2015 10:35 AM
இலங்கையில் திரிகோணமலை அருகே சம்பூர் கிராமத்தில் தமிழர் களை மறுகுடியேற்றம் செய்ய அமெரிக்கா ரூ.66லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளது.
இலங்கை போரின்போது சம்பூர் கிராமத்தில் இருந்து வெளியேறிய தமிழர்களை மீண்டும் மறுகுடியேற்றம் செய்யும் பணி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதுதொடர்பாக அண்மையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தமிழர்களின் நிலங்களுக்கான ஆவணங்களை அதிபர் சிறிசேனா வழங்கினார். அங்கு தற்காலிக வீடுகள் அமைக்க ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
சம்பூர் கிராமத்தில் இருந்து 825 குடும்பங்கள் வெளியேறியுள்ளன. இதில் 234 குடும்பங்களுக்கான நில ஆவணங்கள் சம்பந்தப்பட்ட வர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் தெற்காசிய, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் கொழும்பு சென்றார். அங்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, நீதித்துறை அமைச்சர் விஜிதாஸ ராஜபக்ச ஆகியோரை சந்தித்துப் பேசினார்.அதன்பின்னர் நிருபர் களிடம் நிஷா பிஸ்வால் பேசிய போது, அதிபர் சிறிசேனா மற்றும் இலங்கையின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்தார்.
அமைச்சர் சமரவீரா கூறியபோது, போரினால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் படும் நிவாரணப் பணிகள் குறித்து அமெரிக்க குழுவிடம் விளக்கப் பட்டது என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கைக் கான அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சம்பூர் கிராம தமிழர்களின் மறுகுடியமர்வுக்காக அமெரிக்கா சார்பில் ரூ.66 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அங்கு இரண்டு பள்ளிகள் கட்ட உதவி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT