Published : 03 May 2020 10:57 AM
Last Updated : 03 May 2020 10:57 AM

‘ஒருமுறை ஒரு வைரஸ்’ - அமெரிக்காவையும் ட்ரம்பையும் கேலி செய்து சீனா அனிமேஷன் வெளியீடு

கரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 65,000 த்தைக் கடந்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக புள்ளி விவரம் தெரிவிக்கையில் அதிகாரப்பூர்வமற்ற இன்னொரு புள்ளிவிவரங்களின் படி அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 67,444 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை 11,60,774 ஆக அதிகரித்துள்ளது..

இந்நிலையில் இருநாடுகளும் ஒருவர் மீது ஒருவர் சேற்றைவாரி இறைக்கின்றனர், வைரஸ் எங்கு தோன்றியது என்பதில் இருநாடுகளுக்கும் வார்த்தை மோதல்கள் முற்றி வருகிறது, சீனா மீது விசாரணை மேற்கொள்ள அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சீன அரசு ஊடகத்தில் கரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா எப்படி செயல்பட்டது என்பதையும் அதிபர் ட்ரம்பின் கரோனா வைரஸ் குறித்த கருத்துகளையும் பகடி செய்து அனிமேஷன் செய்து வெளியிட்டுள்ளது.

அதாவது கரோனா போராளிகள், மருத்துவப் பணியாளர்களைக் குறிக்கும் முகக்கவசங்கள் அணிந்த பொம்மை ஒருபுறம் மற்றொரு புறம் அமெரிக்க சுதந்திராச் சிலை.

இருதரப்புக்கும் நடக்கும் உரையாடல் என்று அமெரிக்காவை கேலி செய்து அனிமேஷன் வடிவத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், “நாங்கள் ஒரு வைரஸ் கண்டுபிடித்துள்ளோம்” என்று ஒரு வாரியர் கூறுகிறார்.

அதற்கு அமெரிக்கச் சுதந்திரா சிலை, “அதனால் என்ன? இது வெறும் ஃப்ளூதான்” என்று கூறுகிறது.

பிறகு வாரியர்கள் வைரஸ் பற்றிய எச்சரிக்கைகளை விடுக்கிறது. சீனாவின் மைல்கல்களை எடுத்துக் கூறுகிறது. ஆனால் சுதந்திரச் சிலை இதற்கு அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியவற்றைக் கூறி மறுக்கிறது. அதாவது கரோனாவின் தாக்கத்தை நீர்க்கச் செய்யுமாறு சுதந்திரச் சிலை பதிலளிக்கிறது.

ஒரு கட்டத்தில், “நீங்கள் உங்களையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்க சுதந்திரச் சிலையே காய்ச்சலினால் சிகப்பு நிறமாக மாறுகிறது. சுதந்திர சிலைக்கே ஐவி ட்ரிப் ஏற்றப்படுகிறது.

அப்போதும் சுதந்திரச் சிலை கூறுகிறது, “நாங்கள் சுயமுரண்பாடுகள் கொண்டிருந்தாலும் நாங்கள்தான் எப்பவும் சரி” என்று.

இதற்கு பொம்மைகள், “இதுதான் அமெரிக்காவிடம் பிடித்தது. உங்கள் சீரான பதில்கள் இருக்கிறதே” என்று முரண்பாடுகளிலும் ஒரு சீர் தன்மை இருப்பதாக அமெரிக்காவையும் ட்ரம்பையும் கடும் கேலி செய்து அனிமேஷன் படம் வெளியிட்டுள்ளது.

இது லீகோ பொம்மைகள் போல் இருந்ததால், லீகோ நிறுவனம் “இந்த அனிமேஷனுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x