Published : 01 May 2020 04:02 PM
Last Updated : 01 May 2020 04:02 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வசதியாக இந்தியத்தூதரகம் தொடங்கிய இணையதளத்தில் இதுவரை 32 ஆயிரம் இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர்
இந்த இணையதளம் தொடங்கப்பட்ட 2 நாட்களில் 32 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இணைதளம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் ஆயிரக்கணக்கில் பயன்படுத்தியதில் திடீரென கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது. அதன்பின் சில மாற்றங்களுடன் பதிவு செய்ய இந்தியத் தூதரகம் அனுமதித்தது. அந்த வகையில் வியாழக்கிழமை மாலை 5 மணிவரை 32 ஆயிரம் பேர் தாயகம் திரும்ப பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பினால் துபாயில் உள்ள துணைத்தூதரகம் மூலம் தங்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதற்காக தூதரகம் சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, www.indianembassyuae.gov.in அல்லது www.cgidubai.gov.in மற்றும் www.cgidubai.gov.in/covid_register என்ற இணையதளத்தில் இந்தியர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துபாயில் உள்ள துணைத் தூதர் விபுல் நிருபர்களிடம் கூறுகையில் “ கரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக அபுதாபியில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து இதுவரை 32 ஆயிரம்பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் விவரங்களை பிரிக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை.
இந்தியர்கள் விண்ணப்பத்தில் அவர்கள் கூறியுள்ள காரணத்தின் அடிப்படையில் அதாவது கர்ப்பிணிப்பெண்கள் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிைம அளித்து அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்தியர்கள் அனைவரும் தாயகம் செல்ல விருப்பமாக இருக்கிறார்கள் என்பது தெரியும்.
ஆனால், இப்போதுள்ள சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளை மனதில் வைத்துதான் முடிவு எடுக்கப்படும். இன்னும் சில நாட்களுக்கு இணையதளம் பயன்பாட்டில் இருக்கும் என்பதால் முன்பதிவு செய்யலாம்.
பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அளித்து இடம் கிடைக்கும் என உறுதியளிக்க முடியாது
இதில் உடல்நலம் பாதித்தவர்கள், முதியோர், கர்ப்பிணிகள், குழுவாக சிக்கியிருப்பவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை முதலில் வழங்கப்படும். ஆனால் இதுவரை இந்தியஅரசிடம் இருந்து பயணிகளை எவ்வாறு வகைப்படுத்தி, முன்னுரிமை அடிப்படையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று உத்த ரவு வரவில்லை.
இந்தியர்கள் அழைத்துச் செல்ல ஏர் இந்தியா விமானங்கள் பயன்படுத்தப்படும், ஆனால் போர்விமானங்கள் பயன்படுத்துமா என்பது தெரியாது” எனத் தெரிவித்தார்
இதற்கிடையே கேரள அரசு நேற்று வெளியிட்ட ஒரு தகவலில் 201 நாடுகளில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 468 மலையாளிகள் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT