Published : 28 Apr 2020 08:01 PM
Last Updated : 28 Apr 2020 08:01 PM
சீனாவில் இணைய வசதியைப் பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை 90.5 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், “2018-ல் 83 கோடி பேர் இணையத் தொடர்பு கொண்டிருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வரையில் கூடுதலாக அங்கு 7 கோடி பேர் புதிதாக இணையத் தொடர்பு பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சீன மக்கள் தொகையில் 64.5 சதவீதம் பேர் இணைய வசதி பெற்றிருக்கின்றனர். இது 2018-ல் இருந்ததைவிட 4.9 சதவீதம் அதிகம் ஆகும்.
சீனாவில் செல்போன்களின் வழியே இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2018-ல் இருந்ததைவிட 8 கோடி உயர்ந்து மார்ச் மாதத்தில் 89.7 கோடியாக உள்ளது. நகர்ப்புறங்களில் 65 கோடி மக்களும் கிராமப் புறங்களில் 25.5 கோடி மக்களும் அங்கு இணைய சேவையைப் பயன்படுத்துகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பல இணையதளங்களுக்கு அனுமதி கிடையாது. ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுக்கும் தேடுதளமான கூகுளுக்கும் தகவல்களை உள்ளடக்கிய விக்கிபீடியாவுக்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள சமூக வலைதளமான விபோ போன்றவையும் சீன அரசின் கண்காணிப்பில்தான் இயங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT