Published : 28 Apr 2020 11:21 AM
Last Updated : 28 Apr 2020 11:21 AM
கரோனா வைரஸ் அறிகுறியாக இதுவரை காய்ச்சல், மூச்சு விடுதலில் சிரமம், தொண்டை அழற்சி ஆகியவை மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் நோய் அறிகுறிகளை அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
புதிய நோய் அறிகுறிகளாக குளிர், நடுக்கம், தசை வலி, தலைவலி, ருசி மற்றும் வாசனை இழப்பு ஆகியவையும் கரோனா அறிகுறிகளாகத் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
உலகச் சுகாதார அமைப்பின் இணையதளதில் ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்’பகுதியில் இந்த புதிய நோய் குறிகுணங்கள் சேர்க்கப்படவில்லை.
இது தவிர எந்த ஒரு நோயும் தீவிரமடைந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேரில் ஒருவருக்குத்தான் நிலைமை மோசமடைவதாகத் தெரிவித்த உலகச் சுகாதார அமைப்பு 80% நோயாளிகள் மருத்துவமனை சிகிச்சை இல்லாமலேயே குணமடைவதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குளிர், நடுக்கம், தசை வலி, தலைவலி, ருசி மற்றும் வாசனை இழப்பு ஆகியவையும் கரோனா நோய் அறிகுறிகள் என்று அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது சாதாரண குளிர், நடுக்கம், தலைவலி ஆகியவை ஏற்கெனவே நீண்ட கால நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இருக்குமாயின் எச்சரிக்கை தேவை என்கிறது அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT