Published : 27 Apr 2020 11:17 AM
Last Updated : 27 Apr 2020 11:17 AM

வடகொரிய அதிபர் கிம் உயிருடன் இருக்கிறார்: தென்கொரியா

வடகொரிய அதிபர் கிம் உயிருடன் இருக்கிறார் என்றும் அவரது உடல் நிலை நலமாக உள்ளது என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக வந்தபின் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்துள்ளார்.

சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க உளவுத்துறையும் இதை தீவிரமாகக் கண்காணித்து வருகிறதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி கடந்த இரு நாட்களுக்கு முன் பேட்டி அளித்த அதிபர் ட்ரம்ப், “ அதிபர் கிம் உடல்நலம் தேற வாழ்த்துக்கள் “ என மட்டும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கிம் நலமாக இருக்கிறார் என்று அண்டை நாடான தென் கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் கொரியாவில் வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் முன் ஜோங் இன் கூறும்போது, “ வடகொரிய
அதிபர் கிம் உயிருடனும், நலமாகவும் இருக்கிறார். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் வோன்சன் நகரில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல் நிலை சார்ந்து சந்தேகத்துக்கு இடமான விஷயங்கள் ஏதும் நடக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கிம்மின் உடல் நலம் குறித்த எந்த தகவலையும் வடகொரியா அரசு இதுவரை தெரிவிக்கதாது அவர் உடல் நலன் சார்ந்த சந்தேகங்கள் மேலும் வலுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x