Published : 27 Apr 2020 09:30 AM
Last Updated : 27 Apr 2020 09:30 AM
சவுதிஅரேபியாவில் மைனர்கள்(18வயதுக்கு கீழ்உள்ளோர்) செய்யும் குற்றச்செயல்களுக்கு வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையை ஒழிக்க மன்னர் சல்மான் உத்தரவி்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மரண தண்டனைக்குப் பதிலாக 18வயதுக்குட்பட்டோர் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால் அவருக்கு அபராதம், சிறை, சமூகசேவை ஆகியவற்றை வழங்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.
உலகளவில் மைனர்களுக்கு கூட மரண தண்டனை வழங்கும் சவுதி அரேபிய அரசின் செயல்கள் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் புனித ரமலான் மாதத்தில் இந்த தண்டனையை அந்நாட்டு அரசு ஒழித்துள்ளது பெரு மகிழ்ச்சியையும், மரண தண்டனைக்கு எதிரானவர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது
இந்த மரண தண்டனை ஒழிப்புக்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்டவர் மன்னர் சல்மானின் மகன் முகமது பின் சல்மான் ஆவார். சவுதி அரேபிய நாட்டை பழமைவாதத்திலிருந்து மீ்ட்டெடுக்கும் முயற்சியாக பல்வேறு சீர்திருத்தங்களை அவர் செய்து வருகிறார், குறிப்பாக வகாபிஸத்திலிருந்து நாட்டை மாற்றி வருகிறார்.
சவுதி அரேபியாவை மற்ற நாடுகளைப் போல் நவீனமாக, வேலைவாய்ப்பு, தொழிற்சாலை உள்ளதேசமாக மாற்ற வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் தி்ட்டத்தில் இளவரசர் சல்மான் தீவிரமாக இருந்து வருகிறார்.
இதனால்தான், பல்வேறு உரிமைகளை மக்களுக்கு வழங்கிய இளவரசர் சல்மான் பெண்களுக்கு கார்ஓட்டும் உரிமை, விளையாட்டுப்போட்டிகளைப் பார்க்கும் உரிமை, பெண்ணியவாதிகள் எழுத உரிமை, எழுத்தாளர்களுக்கு உரிமை, சீர்த்திருத்த வாதிகளுக்கு உரிய உரிமைகளை இளவரசர் சல்மான் வழங்கியுள்ளார்.
இவர்களுக்கு இதற்கு முன் உரிமைகள் மறுக்கப்பட்டு அரசுக்கு எதிராகப் பேசவோ குரல்கொடுக்கவோ, எழுதவோ முடியாத சூழல் இருந்தது.2018ம் ஆண்டு சவுதி எழுத்தாளர் கசோகி துருக்கியில் கொல்லப்பபட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததை குறிப்பிடலாம்.
சவுதியில் உள்ள சிறுபான்மை சமூகமான ஷிட்டே பிரிவைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 6 பேருக்கு குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது, இது அந்நாட்டைப்பொறுத்தவரை தீவிரவாத செயல்களுக்கு ஒப்பானதாகும்.
ஆனால், இந்த 6 பேருக்கும் மன்னர் சல்மான் மன்னிப்பு வழங்கி மரண தண்டனையை ரத்து செய்துள்ளார். இவர்கள் 6 பேரும் ஏற்கெனவே 10 ஆண்டுகள் சிறையில் இருந்தததால் அவர்களை விடுவிக்கவும் உத்தரவி்ட்டுள்ளார். கடந்த ஆண்டு சில குற்றங்களுக்காக 16 வயது நிரம்பிய ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது. இதற்கு அம்னஸ்டி அமைப்பு கடுமையாக கண்டனம் தெரிவித்து, சிறார்களுக்கு எதிரான மரண தண்டனையை ஒழி்க்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT