Published : 26 Apr 2020 08:42 AM
Last Updated : 26 Apr 2020 08:42 AM
சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகில் 193 நாடுகளுக்கும் மேலாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகளவில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்துக்கு மேல் சென்றுவிட்டது
இதுவரை கரோனா வைரஸில் பாதி்க்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.36 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி வெள்ளிக்கிழமை இரவுவரை 6,813 பேர் கரோனவால் உயிரிழந்ததாகவும், 93,320 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. இதில் அமெரிக்காவில் மட்டும் 2,710 உயிரிழப்புகளும், பிரிட்டனில் 813, இத்தாலியில் 415 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன
கரோனா வைரஸுக்கு இதுவரை அதிகமான உயிரிழப்புகளை அமெரி்க்காதான் சந்தி்த்துள்ளது.அங்கு 54 ஆயிரத்து 256 பேர் உயிரிழந்துள்ளனர், 9.60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக இத்தாலியில் 26ஆயிரத்து 384 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், 1.95 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஸ்பெயினில் 22 ஆயிரத்து 902 பேர் பலியாகியுள்ளனர், 2.23 லட்சம் பேர் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். பிரான்ஸில் 22 ஆயிரத்து 614 உயிரிழப்புகளும்,1.61 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் உயிரிழப்பு 20 ஆயிரத்து 319 ஆகவும், 1.48 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலகளவில் நிகழ்ந்த 2 லட்சம் உயிரிழப்புகளில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் 2 பங்கும் நிகழ்ந்துள்ளது.
கரோனா வைரஸ் பிறப்பிடமான சீனவில் இதுவரை 4,632 பேர் உயிரிழந்துள்ளனர், 82 ஆயிரத்து 816 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்
ஐரோப்பிய நாடுகளில் மட்டும் மொத்தம் 12 லட்சத்து 52 ஆயிரத்து 497 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 118 பேர் உயிரிழந்துள்ளனர், 4 லட்சத்து 7 ஆயிரத்து 49 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்
ஆசியாவில் இதுவரை 4.60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 16,ஆயிரத்து 951 பேர் உயிரிழந்துள்ளன்ர. லத்தன் அமெரி்க்கா, கரீபியன் தீவுகளில் 7,434 ேபர் உயிரிழந்துள்ளனர், 1.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் 1.50 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர், 6,225 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரி்க்காவில் இதுவரை 1,361 பேர்உயிரிழந்துள்ளனர் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT