Published : 25 Apr 2020 07:09 AM
Last Updated : 25 Apr 2020 07:09 AM

நிலவின் தரைப்பகுதிகளை காட்டும் புதிய வரைபடம்: அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் வெளியீடு

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட நிலவின் விரிவான புதிய வரைபடம்.

வாஷிங்டன்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் எல்பிஐஎன்ற நிலவு ஆய்வு நிறுவனத்துடன்இணைந்து நிலவின் புதிய வரைபடத்தை அமெரிக்க புவியியல்ஆய்வு நிறுவனம் (யுஎஸ்ஜிஎஸ்) வெளியிட்டுள்ளது. நிலவின் ஒருங்கிணைந்த புவியியல் வரைபடமான இது, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு, நிலவின்மேற்பரப்புக்கான உறுதியான வரைபடமாக இருக்கும் எனகருதப்படுகிறது. 2024-ல் நிலவுக்குமீண்டும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்பவுள்ளதாக நாசா கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் இந்த வரைபடம் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இதுதொடர்பாக யுஎஸ்ஜிஎஸ் வெளியிட்ட செய்தியில், “நிலவு 450 கோடி ஆண்டுகள் பழமையானது. அதன் முழு வரைபடம் ஆன்லைனில் தரப்பட்டுள்ளது. இதில் அதிசயிக்கத்தக்க விவரங்கள் உள்ளன. நிலவின் மேற்பரப்பு மற்றும் அது உருவான வரலாற்றை நன்கு புரிந்து கொள்ள இது உதவும்” என்று கூறப்பட்டுள்ளது.

யுஎஸ்ஜிஎஸ் விஞ்ஞானி கோரே ஃபோர்டெஸோ கூறும்போது, “பலஆண்டு கால திட்டத்தின் பலனாக இந்த வரைபடம் உருவாகியுள்ளது. நிலவில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஆய்வு செய்ய முனைவோருக்கு முக்கிய தகவல்களை இந்த வரைபடம் அளிக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x