Published : 23 Apr 2020 11:30 AM
Last Updated : 23 Apr 2020 11:30 AM
கரோனா வைரஸுக்கு அல்லாடி வருகிறது அமெரிக்கா, குறிப்பாக கரோனா மையமாக நியூயார்க் திகழ்ந்து வருகிறது. இங்கு அதிபர் ட்ரம்பின் விருப்பங்களையும் மீறி மக்கள் நலனுக்காக கவர்னர் கியூமோ லாக்-டவுன் முறைகளை கண்டிப்பாக அமல் படுத்தியுள்ளார்.
இந்நிலையில் லாக்-டவினினால் மக்கள் துயரமடைந்து, வேதனையில் வாடும் நிலைமைகளிலும் ஒரு சில நிகழ்வுகள் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் குறியீட்டு ரீதியாக நல்ல அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் அவர்களை நம்ப வைக்கிறது.
தெற்கு புளோரிடா உணவு விடுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் தம்பதியினர் உணவு அருந்தினர். அப்போது கணவரின் விரலிலிருந்து அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகக் கருதப்படும் செண்டிமெண்டல் திருமண மோதிரம் விரலிலிருந்து நழுவி விடுதியின் மரத்தாலான தரையில் விழுந்து காணாமல் போனது, அவருக்கும் அது தெரியவில்லை. எங்கேயோ தொலைத்து விட்டோம் என்று மனவருத்தத்தில் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு கோகனட்ஸ் உணவு விடுதியான அதில் மேலாளர் ரியான் கிரிவோய் மரத்தரையை மாற்ற முடிவெடுத்தார். ஏனெனில் உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை, கரோனா சமூக தூரம் விதிமுறைகள் இருப்பதால் வாங்கி மட்டுமே செல்லலாம் என்பதால் தரையை மாற்ற முடிவெடுத்தார்.
அப்போது தங்கக் காசு, 100 டாலர்கள் பணம், வெள்ளி திருமண மோதிரம் அதில் மைக் & லிசா 08-21-15 என்று பொறிக்கப்பட்டிருந்தது ஆகியவற்றை கண்டெடுடத்தார். உடனே இந்த மோதிரத்தின் படத்தை முகநூலில் உணவு விடுதியின் மார்க்கெட்டிங் மேனேஜர் சஷா ஃபார்மிகா வெளியிட முடிவெடுத்தார்.
இந்த போஸ்ட் 5000 பேர்களால் பகிரப்பட்டது. இதில் மோதிரத்தைத் தொலைத்த மைக்-லிசா தம்பதியினருக்கும் படம் போய்ச்சேர்ந்தது. மகிழ்ச்சியடைந்த லிசா உடனே மோதிரத்தைக் கண்ட குஷியில் விடுதிக்குத் தெரியப்படுத்தினார். உடனே மோதிரம் தம்பதியினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவர் தானும் கணவரும் 2017ம் ஆண்டு அங்கு உணவருந்திய படங்களையும் ஆதாரத்துக்காக விடுதிக்கு அனுப்பினார் லிசா. அதே போல் 2,000 டாலர் பெறுமான பழைய 1855ம் ஆண்டு கால தங்கக்காசு ஆகியவை ஹோட்டலில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT