Published : 23 Apr 2020 11:06 AM
Last Updated : 23 Apr 2020 11:06 AM
அமெரிக்காவில் வனஉயிரினக் காப்பகத்தில் இருந்த புலி, சிங்கத்துக்கு மட்டு கரோனா வைரஸ் தாக்குதல்இருந்த நிலையில் இப்போது வீட்டில் வளர்க்கும் 2 பூனைகளுக்கும் கரோனா வைரஸ்(கோவிட்19) தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது
நியூயார்க் மாநிலத்தில் இரு பூனைகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பால், அந்த பூனைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது, இதையடுத்து வழங்கப்பட்ட சிகிச்சைக்குப்பின் இப்போது பூனைகள் உடல் நலம் தேறிவருகின்றன.
இதற்கு முன் பிரான்ஸ் வனஉயிரினப் பூங்காவில் சிங்கம், புலிக்கு மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் உலகெங்கும் மிருகங்கள் மிகச்சில மட்டுமே பாதிப்புக்குள்ளாகின. ஆனால் வீட்டில் வளர்ககும் செல்லப்பிராணிகள் பாதி்க்கப்படுவது இதுதான் முதல்முறையாகும்
பூனைகளிலிருந்து நிச்சயம் மனிதர்களுக்குப்பரவாது, அதற்கான ஆதாரங்கள் இல்லை. கரோனாவால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மூலமே இந்த 2 பூனைகளுக்கும் கரோனா வைரஸ் பரவியிருக்கும் எனஅமெரிக்க வேளாண் மற்றும் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது
இது தொடர்பாக நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி கேசே பார்டன் பெஹ்ராவேஷ் கூறியதாவது:
“ மக்களை அச்சுறுத்த விரும்பவில்லை. மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை பார்த்து பயப்படவும் தேவையில்லை, அவற்றை பரிசோதனைக்கும் கொண்டுவர வேண்டாம். மக்களுக்கு பரவுவதில் வீட்டு வளர்ப்பு விலங்குகளுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை, ஆதாரமும் இல்லை.
நாங்கள் கூறும் அறிவுரை எல்லாம் உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அடுத்த வீடுகளுக்கோ அல்லது அடுத்த நபர்களையே தொடும் விதமாக வாய்ப்புகளை உருவாக்காதீர்கள். பூனைகளை, நாய்களை வெளியே விடாமல் வீட்டுக்குள் வைத்திருங்கள்.
கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவரிடம் செல்லப்பிராணிகள் பழகியிருந்தால் மட்டுமே அதற்கு கரோனா பரிசோதனை தேவை, அதிலும் செல்லப்பிரணிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்யலாம் இல்லாவிட்டால் வேண்டாம்.
மனிதர்களுக்கு பயன்படுத்தும் வழக்கமான வேதிப்பொருட்களை வைத்து செல்லப்பிரணிகளுக்கு கரோனா பரிசோனை செய்ய முடியாது அதற்கு வேறு பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அந்த பொருட்கள் தற்போது பற்றாக்குறையாக இருக்கிறது. மனிதர்கள் மூலம் கரோனா வைரஸ் விலங்குகளுக்கு பரவுவது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த இரு பூனைகளின் உரிமையாளர்களும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் என்பது ஆய்வில் குறிப்பிடத்தகுந்தது. ஆனால் கரோனாவால் பாதிக்கப்படாத வீடுகளில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கு பாதிப்பு இல்லை.
ஆதலால், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிரணாகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். முடிந்தவரை முக்ககவசம் அணிந்து அவற்றின் அருகே செல்லலாம். முறையான பாதுகாப்பு இல்லாமல் சென்று வீ்ட்டு செல்லப்பிராணிகளுக்கும் கரோனா வருவது அமெரிக்காவில் ஆங்காங்கே நடந்து வருகிறது. ஆனால் இது மிகவும் குறைவுதான்.
ஆனால் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தலாம், நி்ச்சயமாக வீட்டில் வளர்க்கும் நாய்கள், பூனைகள் மூலம் கரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவாது. மனிதர்கள் மூலம்தான் விலங்குகளுக்கு பரவும் சாத்தியம் இருக்கிறது
இவ்வாறு கேசே பார்டன் பெஹ்ராவேஷ் ெதரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT