Published : 20 Apr 2020 06:09 PM
Last Updated : 20 Apr 2020 06:09 PM

இயல்பு நிலைக்குத் திரும்பும் தென்கொரியா

தென்கொரியாவில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதிக்குப் பிறகு அதாவது இரண்டு மாதங்களுக்குப் பிறகு தென்கொரியாவில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணாகப் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு அந்நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

மால்கள், பொழுதுபோக்கு அரங்குகள், தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து 31 வயதான பொறியாளர் ஒருவர் கூறும்போது, “நான் சியோலில் உள்ள கால்பந்துக் குழுவில் விளையாடி வருகிறேன். சுமார் இரு மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமைதான் நான் விளையாட மைதானத்துக்கு வந்திருக்கிறேன்” என்றார்.

மேலும், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கல்வி நிலையங்கள் தென்கொரியாவில் திறக்கப்படவில்லை. தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் மூலமே மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தென்கொரியாவில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தியதற்காக உலக நாடுகள் பலவற்றால் அந்நாட்டு அதிபர் பாராட்டப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு மக்கள் மூன் ஜே இன்னுக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.

தென்கொரியாவில் கரோனா தொற்றுக்கு 10,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 24,07,439 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,25,202 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x